பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLS LLLLL LLLS TT LLLy LLLLL LLLLLLTTyLLLLSK LLLLLS 000

பூஜைகளின் மறைவு, மக்களின் வியாகூலங்கள், உள்நாட்டு நிர்வாகங்களின் நிலை குலைவு, கேள்வி கேட்பாரற்றநிலை, பிரிட்டிஷ் நேரடி ஆட்சி காலத்திய வியாபாராக் கொள்ளை, வரிக்கொடுமை, உள்நாட்டு வட்டிக் கொடுமைகள் காரணமாக ஏற்பட்ட பொது வாழ்வின் சீரழிவு பொருளாதாரத்தின் சீர் குலைவு, இவை காரணமாக பஞ்சம், பசி, பட்டினி, பல்லாயிரக்கணக்கான பல லகூடிக்கான மக்களின் பட்டினிச் சாவு இந்தக் கோர நிலையைக் கண்ட வள்ளலாரும், அடுத்து பாரதி யாரும் கண் கலங்கி நெஞ்சில் உதிரம் கொட்ட நாட்டு நிலைமையை எடுத்துக் கூறினர். கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக. என்றார் வள்ளலார், பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ என்று உள்ளம் குமுறினார் பாரதியார்.

பாரத மக்கள் அமைதி வழியைக் கடைப்பிடித்து ஆங்கிலேய அன்னிய ஆட்சியை எதிர்த்து, கோடிக்கணக்கான மக்கள் திரண்டு கருணையில்லாத ஆட்சியை ஒழித்து வீர சுதந்திரம் பெற்றார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், பசி, பட்டினியைப் போக்க சில நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். உணவு தான்யங்கள், காய்கறி, பழங்கள், பால், முட்டை, முதலிய பொருள்களின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இருப்பினும், நாட்டின் மொத்த வறுமை முழுமையாகக் குறிப்பாக கிராமப்புற மக்களின் வறுமை நீங்கவில்லை. அதன் காரணங்கள் ஆராயப்படுகின்றன. பல ஆலோசனைகளும் முன் வைக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வறுமை நீங்கி வாழ்க்கை வளம் பெறுவதற்கு வழி வகுக்க முனைவோமாக.

தண்டனையின் கருத்து.

இந்தத் தலைப்பில் பாரதி எழுதுகிறார்.

குற்றம் செய்த மனிதனைச் சீர் திருத்தி இனிமேல் அவன்