பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. uGĖgli untieneu 205

குற்றம் செய்யாத படி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்ய வேண்டும். இந்தக் கருத்துடன் தண்டனை செய்வோரையே தர்ம தேவதை கூடிமிக்கலாம். பழிக்குப்பழி வாங்கி விட வேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற அதிகாரம் மனிதனுக்குக் கிடையாது. மூடனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தால் இந்திரியங்களைக் கட்டியாள முடியாதவனை விரதங்களிலே போட்டால் உயர்ந்த பதவியில் இருப்போர் எப்பொழுதும் நியாயத்தையே செய்து காட்டினால் பிறகு களவு இராது.

பள்ளிக் கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அதிகப் படுத்தினால் சிறைச்சாலைகள் குறையும் என்பதை அநேக நீதி சாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார்களின் தொகை அதிகப் பட்டால் போலிஸ் சேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகார்த்தின் கீழ் பள்ளிக் கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும். போலிஸ் சேவகமும் சிறைச் சாலையும் குறையும்” என்று பாரதி எழுதுகிறார்.

நீதி என்னும் தலைப்பில்

"நீதி என்பது பொது ஒழுக்கம். ஒரு கிராமத்தில் வலியவனுக்கு வேறு நியாயம், எளிவனுக்கு வேறு நியாயமாக இருந்தால் அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கிராமம் உடனே அழிந்து விடும். ஜனங்கள் குற்றம் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றம் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு. நியாயஸ்தலங்களிலிருந்து நீதியைப் பரிபாலனம் செய்வோர் ஒரு பகுதி. நீதி (சட்ட) சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி. இவ்விரு நிறத்தாரும் கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொது