பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்_ജ്ജു அரசியல் prope *©ġrużż©ġġżost-e: சீனிவாசன் 207

ஜனங்களைச் சேர்ந்தது.

தண்டனை, நீதி என்னும் தலைப்புகளிலே பாரதியார் எழுதியுள்ள பருந்துப் பார்வைக் குறிப்புகளிலே தண்டனை, சிறைச்சாலை, பள்ளிக் கூடங்கள், போலீஸ் சேவகர்கள், ஆசிரியர்கள், நீதி, நீதி (சட்ட) சபைகள், நியாய ஸ்தலங்கள் முதலியவற்றைக் குறிப்பிடுகிறார். பாரதி காலத்திலிருந்து இன்று சுமார் நூறு ஆண்டுகளாகியுள்ள நேரத்தில் நாடு விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நேரத்தில் சில நடவடிக்கைகள் சில சில்லரைத் திருத்தங்கள் செய்யப் பட்டிருந்த போதிலும் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

குற்றவியல் சட்டங்கள், தண்டனைவியல் சட்டங்கள், போலீஸ் சட்டங்கள், சாட்சியச் சட்டங்கள் முதலிய கிரிமினல் சட்டங்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இயற்றப் பட்டவை. அவைகளின் படி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள். போலிஸ், சேவகர்கள். போலிஸ்காரர்களுக்கு நமது சட்டங்களின் படி, குற்றங்களைக் கண்டு பிடிப்பதில் விசாரணை நடத்துவதில் வழக்குகள் பதிவு செய்வதில், சாட்சிகளைத் தயாரிப்பதில் வழக்குகளை நடத்துவதில் வானளாவிய அதிகாரங்கள் உள்ளன. ஆங்கிலேயர் உண்டாக்கியது ஒரு அடிமை நாட்டை ஆள்வதற்குரிய போலிஸ் அரசு போலிஸ்ஆட்சி. போலீஸ் சட்டம். நீதி ஸ்தலங்களில் விசாரிப்பது, இந்த சட்டப்படியேயாகும். இந்த நியாய ஸ்தலங்கள் மூலம் கிடைக்கும் நீதி சட்ட நீதி. ஆயினும் நீதிஸ்தலங்கள் இன்று சயேச்சையாகச் செயல் படுகின்றன. அதனால் நியாயங்கள் கிடைக்கின்றன. இந்த நியாய ஸ்தலங்களின் தீர்ப்புகள் பலவும் போலிஸ் செயல்பாடுகளைப் பற்றிக் கூறிய தீர்ப்புகள் பரிசீலிக்கப் படவேண்டியவை. எனவே போலீஸ் நிர்வாகத்திலும், செயல் பாட்டிலும், குற்றவியல் மற்றும் தண்டனைவியல் சட்டங்களில்