பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLL LLLLL LLL LLLLL LL LLLLLLLLLLSK LLyLLS000

3 3 . குரு :

குரு என்னும் தலைப்பில் பாரதி எழுதுகிறார்.

இக்காலத்தில் பிராமணர் நமக்கு சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட ஆறு தொழில்களை மறந்து பெரும்பாலும் வேறு தொழில்களைச் செய்து வருகிறார்கள். இருந்தாலும் ஐரோப்பா முதலிய இதர தேசத்து குருக்களைக் காட்டிலும் நமது தேசத்து பிராமணர்கள் சிறந்தவர்கள் என்று அமிர்தபஜார் பத்திரிகை சொல்லுகிறது. புரோகிதத் தொழிலும் சாஸ்திரப்படிப்பும் விடாமல் இருக்கும் பிராமணர் இப்போது கூடப் பல இடங்களில் விசாலப்பயிற்சியும் அதனால் உண்டாகும் பெருமைகளும் இல்லாதிருந்த போதிலும் நல்லொழுக்கம் வைதீக புத்தி முதலியவற்றில் பிற தேசத்து குருக்களிலும் மேல்” என்பது அந்த்ப் பத்திரிகையின் கருத்து. ==

பாரதியார் மேலும் எழுதுகிறார். விதி விலக்கான சிற்சில விசேஷ மனிதரைத் தவிர மற்றபடி பண விருப்பம் எல்லாருக்கும் உண்டு. ஆனாலும் லெளகீக ஆசை விஷயத்தில் ஐரோப்பிய புரோகிதர் குருக்கள் முதலியவர்களைக் காட்டிலும் நமது தேசத்து “ஐயன்மாரை’க் கொஞ்சம் நேர்மையுள்ளவர்களாகவே நினைக்க வேண்டும். காசுக்கும் அதிகாரத்துக்கும் எல்லாரும் தான் வாயைப் பிளக்கிறார்கள். ஆனாலும் ரோமாபுரியில் கிறிஸ்தவ குருக்கள் ஐரோப்பா எல்லை முழுவதிலும் பூமியாட்சி விவகாரங்களில் தலையிட்டு, ராஜாக்களுடன் கூடியும் பகைத்தும் கலகங்கள் ஏற்படுத்தியது போல் நமது தேசத்து புரோகிதரும் குருக்களும் செய்வதில்லை. தமிழ் நாட்டில் வன்னியரும், மறவரும், நாயக்கரும், துருக்கரும், அரசும் அதிகாரமும் செலுத்துகையில் குருக்கள் தெய்வப் பக்தியை மறந்து பணத்துக்காக சூழ்ச்சிகள் செய்யவில்லை. இக்காலத்தில் கூட ஒரு ஆங்கிலேய கிறிஸ்தவப் பாதிரிக்குக்