பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் Цофрге sgpgnus.sqbggil°est-el சீனிவாசன் 211

34.கொல்லாமை ஜீவகாருண்யம்:

மிருகங்களையும் பசுவிகளையும் கொல்ல வேண்டாம், பலியிட வேண்டாம், என்பது பாரதியாரின் கருத்தாகும். அக்கருத்தை வலியுறுத்திக் கூறும் வகையில் மிருகங்களும் பசுவிகளும் என்னும் தலைப்பில் பாரதி ஒரு சிறந்த கட்டுரை எழுதியுள்ளார்.

"கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்கி

எல்லார்க்கும் சொல்வதென் இச்சை பராபரமே”

-தாயுமானவர்

லெளகீக விஷயங்களில் மகா நிபுணரும் சிறந்த வேதாந்தப் பயிற்சி உடையவருமாகிய எனது நண்பர் ஒருவர், அவருக்கு “கோபாலப் பிள்ளை” என்று புனைப் பெயர் சூட்டுகிறேன். இன்று பகல் நேரத்தில் என்னிடம் வந்து சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.

அவர் என்னிடம் சொன்னார். நீங்கள் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில் எந்த வகுப்பினருக்கும் மனவருத்தம் நேரிடாதபடி எழுதுவதே நன்று. இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன் சொலால் என்றும் மகிழாதே. பிறருக்குக் கோபம் ஏற்படாத வகையில் எவ்வளவோ எழுத இடமிருக்கிறது. உலகத்தை சீர்திருத்த வேண்டும் என்பதும், உலகத்தாருக்கு உங்களால் இயன்ற வரை நன்மை செய்ய வேண்டும் என்பதுமே நீங்கள் பத்திரிகைக்கு எழுதுவதன் நோக்கம். அந்த நோக்கம் விரைவில் நிறைவேற வேண்டுமானால், நம்முடைய கொள்கைகளைச் சிறிதேனும் கோப -மில்லாமலும், ஆத்திரப்படாமலும், பிறர் யாவரேயாயினும் அவர் மனம் சிறிதேனும் நோவாமலும் முற்றிலும் இன்சொற்களால் எழுதுவதே சிறந்த வழியாகும்” என்றார்.