பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. Q&mévovmsmum ásuęrqysimuli 212

இது கேட்டு நான் மிகவும் நன்றாகச் சொன்னிர்கள். இதுவே என் சொந்த அபிப்ராயம். ஆனாலும் ஸ்திரீகளின் நிலைமை, கீழ் ஜாதியார்களின் நிலைமை, ஏழைகளின் நிலைமை, மிருக, பகூவிகளின் நிலைமை. இவற்றைக் குறித்து எழுதும் போது மேற்படி மாதர் முதலான எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும் ஈரம் இரக்கம் இன்றிக் கொடுமைகள் செய்யும் போது அந்த மக்கள் மீது சில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம் வந்து விடுகிறது. ஆனால் இந்தக் கோபத்தையும் கூடிய சீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கி விடுகிறேன். நீங்கள் சொன்ன விதியையே எப்போதும் அனுஷ்டிக்க முயலுகிறேன். ஏனென்றால் கோபச் சொற்கள் நமது நோக்கத்தின் நிறை வேறுதலுக்கே நீங்கள் குறிப்பிட்டவாறு தடையாகி முடிகின்றது. ஆடு, மாடு தின்போரை நாம் வாய்க்கு வந்தபடி வைதால்,

அதனின்றும் அவர்களுக்கு நம் மீது கோபம் அதிகப்படுமேயொழிய

அவர்கள் மாம்ச பகஷணத்தை நிறுத்த வழியுண்டாகாது. தக்க நியாயங்கள் காட்டுவதும் அவர்களுடைய காருண்யத்தை நாம் கெஞ்சுவதுமே மனிதர் நாம், சொல்லும் ജിഞധ அங்கீகரிக்கும் படி செய்யும் உபாயங்களாகும்.” என்றேன் என்று பாரதியாா எழுதுகிறார். மேலும்,

கோவில்களில் ஆடு, கோழிகள் பலியிடுவதையும், அந்த கோரமான கொடுமைகளைக் குறித்தும் மேலும் எழுதுகிறார். “இன்னும் நாடு முழுமையிலும் இம்மாதிரியான கோயில்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றில் நடக்கும் கொலைகளைத் தடுக்கும் படி அந்தக் கோயில் தர்மகர்த்தாக்களையும் பொது ஜனத் தலைவர்களையும் காலில் விழுந்து கேட்டுக் கொள்வதாகப் பத்திரிகைக்கு எழுதப் போகிறேன். கோபச் சொற்கள் சொல்வதிலும், வைவதிலும் காரியம் இல்லை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்! நாம் என்ன செய்வோம்” என்றேன்.