பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34-கொல்லாமை-ஜிவகாருண்யம் 214

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் வட பகுதிகளில் ஆங்கிலேயர் - ஆற்காட்டு நவாப் படைகள் ஒரு பக்கம் பிரஞ்சுக்காரர் - ஹைதர் அலி திப்பு சுல்தான் படைகள் மறு பக்கம் நடந்த போர்களில் கால்நடைகள் ஆடு கோழி அனைத்தும் படைகளால் கொன்று தின்று தீர்க்கப் பட்டன. நீர்நிலைகள் அழிந்தன. சாகுபடித் தொழில் சிதைந்தது. நெசவுத் தொழிலும், இதர தொழில்களும் நைந்து போயின. மக்கள் பட்டினியாலும், பசியாலும் பல லகூடிக்கணக்கில் செத்து மடிந்தனர். வடலூர் வள்ளலார் தோன்றினார். கொலைகளை நிறுத்துங்கள், பசியைப் போக்குங்கள். கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக. கண் மூடிப் பழக்கங் -களெல்லாம் மண் மூடிப்போகட்டும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி தர்ம சாலைகளை ஏற்படுத்தினார். ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நிறுவி, ஆடு, கோழிகள் பலியிடப் படுவதை நிறுத்தும் படி வேண்டினார். வள்ளலாரின் தொடர்ச்சியே மகாகவி பாரதியாராகும்.

'மவத காலத்தில் பல் இருந்தது. புத்தரும், மகாவீரரும் சர்வ ஜன சமத்துவத்தையும் ஜீவ காருண்யத்தையும் நிறுவினார்கள். பகவத் பாத ஆதி சங்கரர் அந்த ஜீவ காருண்யத்தையும் சர்வ ஜன சமத்வத்தையும் சனாதன தர்மத்தின் பகுதியாக்கி பாரதப் பண்பாட்டின் பகுதியாக இணைத்து விட்டார். பக்திப் பேரியக்கம் அவைகளை நிலை நாட்டியது.

ஆயினும் இந்து சமுதாயத்தின் பெரும்பாலான மக்கள் ஆடு, கோழிகளை பலியிடுவதை தமது வழி பாட்டின் பகுதியாக பழக்க வழக்கங்களின் பகுதியாக நீடித்துக் கொண்டு வந்துள்ளனர்.

வள்ளலார் வழியில் பாரதியும் ஜீவ காருண்யக் கருத்தை மேலும் முன்னெடுத்துக் கொண்டு வந்தார்.