பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில்-அரசியல் prope *QPgouéogèssi-ept சீனிவாசன் 215

ஆடு, மாடுகள், கால்நடை பராமரிப்பு, நமது கலாச்சாரத்தின் அங்கம். ஐரோப்பாவில் குதிரை சக்தியே பிரதானம். பாரத நாட்டில் காளைமாட்டு சக்தியே பிரதானம். சிவபெருமானின் வாகனம் காளை மாடு அன்றோ!, கால்நடைகள்தான் நமது சாகுப்படித் தொழிலின் அடிப்படை. கால்நடைகள் இல்லாவிட்டால் நமது சாகுபடித் தொழில் நசிந்து விடும். எனவே நமது நாட்டின் நமது சமுதாய வாழ்க்கையின் அடிப்படையே சாகுபடித் தொழிலும், கால் நடைப் பராமரிப்புமேயாகும். அதைப் பாதுகாப்பது நமது உயிர் பிரச்னையாகும்.

நமது நாட்டு மக்களின் பழக்கத்தில் உள்ள கிராமக் கோவில் பலிகளை நிறுத்த வேண்டும். நமது வழிபாட்டைத் துய்மைப் படுத்த வேண்டும். சுத்தப் படுத்த வேண்டும், மனிதப் படுத்த வேண்டும். ஆகவே நமது ஜனத்தலைவர்களின் கால்களில் பொற்பாதங்களில் விழுந்து கெஞ்சிக் கேட்டு அமைதியான வழியில் அவர்களிடம் எடுத்துக் கூறி பலியை, நிறுத்துமாறு அவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறுகிறார். பாரதி எழுத்தாளர், பத்திரிகையாளர். எனவே பத்திரிகைகளில் இந்த செய்தியை மட்டுமன்றி எந்தச் செய்தியையும் கருத்தையும் மற்றவர் மனது புண்படாத படி எழுத வேண்டும் என்று பத்திரிகைத் துறைக்கு எழுத்துலகுக்கு ஒரு இலக்கணமும் வகுத்துக் கூறுகிறார்.

இன்னும் பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழைகள் முதலிய நலிந்த பிரிவினர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து, அவைகளைப் பெருக்க வேண்டும். நமது நாட்டுப் பொருளாதாரத்தில் கால்நடைச் செல்வம் முக்கியமான பகுதியாகும். முட்டை, பால், நெய் முதலியவற்றில் பாரதம் தொன்று தொட்டு முன்னணியில் இருந்து வந்திருக்கிறது. இன்றும் முதலிடம் பெற்றிருக்கிறது. நலிந்த பிரிவினர்களை கை தூக்கி விட்டு மேல் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு எதிராகக் கொடுமைகள் நடக்கும் போது நமக்குக் கோபம் வருகிறது.