பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35._!!!!©uė ėėėėji 21B

நமது நாட்டில் இவை விருத்தியடையவில்லை ஏன்? எதனாலே? என்னும் கேள்விகளுடன் பாரதி இந்தக் கட்டுரையை முடிக்கிறார்.

அக்காலத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உலக மக்களிடையில் நேர்மையும் ஜனநாயகமும் பேசினார்கள். ஆனால் அவர்கள் பிரிட்டனில் அனுமதித்த ஜனநாயகத்தை இந்தியாவில் அனுமதிக்கவில்லை. பிரிட்டனில் ஜனநாயகம், இந்தியாவில் கொடுங்கோன்மை, யதேச்சதிகாரம், போலிஸ் ஆட்சி. எனவே தான் பாரதி இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நாட்டு விடுதலைக்காக பாரதி பாடினார், எழுதினார், பேசினார். பாரதி அத்துடன் நிறுத்தவில்லை. மக்களுடைய கஷ்டங்களை, துன்ப துயரங்களைப் போக்குவதற்கு நிவாரணப் பணிகள், ஜனசேவைப் பணிகள் செய்ய வேண்டுமென்று பேசினார், எழுதினார், கல்வி சுகாதாரம் வைத்தியம் முதலிய பணிகளைச் செய்ய வேண்டும். மக்கள் சேவைப் பணிகளாக என்று பேசினார், எழுதினார். கலை, இலக்கியம், இசை, கூத்து முதலிய மக்களுடைய மன மகிழ்ச்சிக்கான பணிகளையும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று பேசினார், எழுதினார்.

அன்று அன்னிய ஆட்சி இத்தகைய மக்கள் நலப் பணிகளில் அக்கரை செலுத்தவில்லை. எனவே நாட்டு மக்களே முனைந்து இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று பாரதி பேசினார்.

நாடு விடுதலை பெற்ற பின்னர் நாட்டில் மக்களாட்சி (ஜன நாயகம்) மலர வேண்டும் என்பது பாரதியாரின் கருத்தாகும். மக்களாட்சி அமைப்புகள் மக்களுக்கான பல பணிகளைப் பற்றியும் திட்டமிட்டு அவைகளை மக்களுடைய பங்கேற்போடு நிறைவேற்ற வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும்.