பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 1B

அரசியல் கட்சித் தலைவர்கள், குறிப்பாக நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், ஆட்சிப் பொருப்பிற்கு வரும் பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அறநெறி ஒழுக்க நெறி தவறிக்கெட்டு, நாட்டு நலனை பின்னுக்குத் தள்ளி, சுய நலமும் லஞ்சமும் ஊழலும் நிறைந்து கிரிமினல் தொடர்புகள் கொண்டு, சில அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு நாட்டை சூரையாட முயற்சிப்பதால் நாட்டில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் காணமுடியவில்லை. ஆயினும் நமது மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் பல இன்னல்கள் இடையூறுகளையும் தடைகளையும் தாண்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு

சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும் நாட்டில் புதிய சிந்தனைகளும் முயற்சிகளும் வளரத் தொடங்கியுள்ளன. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் இணைத்து பாரதி வழியில் புதிய காட்சிகள் தோன்றி மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை. “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மையிருட் கணம் போயின யாவும்” என்று புதிய காலத்திற்கான விடி வெள்ளி தோன்றி பலப்பட்டு வருகிறது. கீழ்வானம் வெளுத்து வருகிறது.

2. சென்ற ஆண்டில் மதுரையில் பக்திப் பேரவையின் சார்பில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஒரு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில் ஐயாயிரம் பெண்கள் கலந்து கொண்டார்கள். எனது இனிய நண்பர் பக்திப் பேரவையின் வழிகாட்டி திரு. சண்முகநாதன் அவர்களுடைய அழைப்பின் பேரில் அடியேனும் அந்தத் திருவிளக்கு பூஜைத் திருவிழாவைக் காண்பதற்காக மதுரை சென்றிருந்தேன்.

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் வடக்கு-மேற்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் மேடை ஏற்பாடு செய்து