பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.டநிறைவடை –*

38.நிறைவுரை:

பாரதியாரின் கட்டுரைகள் மிகச் சிறந்த இலக்கியமாக அமைந்துள்ளது. அவர் மாபெரும் கவிஞர். அத்துடன் அவர் ஒரு சிறந்த உரைநடை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியர்.

பாரதி காலத்திற்குச் சற்று முன்பு தான் தமிழில் உரைநடையும் பத்திரிகைகளும் தோன்றின. எனவே தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் விரிவான தமிழ் உரைநடையும் தமிழ்ப் பத்திரி -கைகளும் புதிது. இத்தகைய ஒரு புதிய துறைக்கு பாரதியார் சிறந்த களமும் தளமும் அமைத்து அவற்றிற்கு நல்ல பாதையும் அமைத்துக் கொடுத்தார். அவருடைய படைப்புகளும் பணிகளும் இந்தத் துறைகளுக்கு சிறந்த வழி காட்டியாக உள்ளது.

பாரதி தனது பத்திரிகைப் பணிகள் மூலம் தமிழ் உரைநடையை செப்பனிட்டு வளர்த்தார் என்று கூறலாம். அவருடைய உரைநடை தமிழ் மக்கள் மொழியாகும்.

அவர் பல கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய உரைநடைக் கட்டுரைகளும், கதைகளும் முழுமையாகத் தொகுப்பு நூல்களாக இன்னும் வெளிவரவில்லை. ஆயினும் முக்கியமானவை கட்டுரைகளும், கதைகளும் தனி நூல்களாக வெளி வந்துள்ளன. அவையெல்லாம் இந்தியாவில் இதர மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப் பட வேண்டும்.

பாரதியார் தனது கட்டுரைகளில் நாட்டின் பலவேறு பிரச்னைகளைப் பற்றியும், அவர் காலத்திலிருந்து வந்த அரசியல் பொருளாதார சமுதாய நிலைமைகளை விமர்சித்தும் புதிய ஆலோசனைகளைக் கூறியும் புதிய கட்டளைகளை விடுத்தும் எடுத்துக் கூறுகிறார்.