பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல்_மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-ஆ-சீனிவாசன்-233

“மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்ற முதுரட்டித் தழுவியதிந்நாடே - மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வனங்கே னோ?”

பாரதியின் இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் பளிச்பளிச் என்று உண்மையும் உயிர்த்துடிப்பும் வெளிப்படுகிறது. இந்த மாபெரும் புலவனைப் போல், புரட்சிகர ஜனநாயகப் பெரும் புலவனைப் போல் பூமியில் யாங்கணும் நாம் கண்டதில்லை.

இதைப்போல் பாரதியின் ஒவ்வொரு கவிதையிலும் இனிய பாடல்களிலும் கட்டுரைகளிலும், கதைகளிலும் உயிர்த் துடிப்பையும், தெய்வப் பக்தியையும் தேசபக்த உணர்வையும் காண முடியும்.

தேச பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்து நிற்பதும், உலக வாழ்க்கையும் (லெளகிகமும்) ஆன்மீகமும் இணைந்து நிற்பதும் அறம் பொருள் இன்பம் வீடு (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) என்னும் புருஷார்த்தங்களுக்குச் சரியான ஒன்றிணைந்த விளக்கம் கூறப் பட்டிருப்பதும் பாரதியாரின் படைப்புகளின் தனிச் சிறப்பாகும்.

தேச பக்தி என்பது நாடு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்வதோடு நின்று விடுவதில்லை. தேச சுதந்திரம், தேச விடுதலை என்பது