பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

38._நிறைவுரை _--→ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS –-----

அன்னிய ஆட்சியை அகற்றுவதோடு நின்று விடுவதில்லை. அது முதல் படிதான். ஆயிரம் ஆண்டுகளாக, நமது தாய் நாட்டின் மீது நடத்தப்பட்ட படையெடுப்புகள் கொள்ளைகள் ஆக்கிரமிப்புப் போர்கள், அன்னியக் கொடுங்கோலாட்சி, அவைகளினால் ஏற்பட்ட பாதிப்புகள் படுகாயங்கள், சேதங்கள் ஆகியவற்றை ஆற்றி, பாரதம் மீண்டும் புத்துயிர் பெற்று புனர்ஜென்மம் எடுத்து உலகின் தலைமைக்கு வர வேண்டாமா?

நம் மீது இருகப் பிணைக்கப் பட்டிருந்த அடிமைச்சங்கிலியின் ஒரு கண்ணி உடைக்கப் பட்டு விட்டது. எனவே அந்த இருகல் தளர்ந்திருக்கிறது. மற்றுமுள்ள தளைகளை முறித்தெரிவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு விட்டன.

உள்நாட்டு மன்னர்கள், ஜமீன்தார்கள், மற்றுமிருந்த குட்டி ராஜாக்கள் அதிகாரத்திலிருந்தும் ஆட்சியிலிருந்தும் நீக்கப் பட்டு விட்டார்கள். சுதேசி சமஸ்தானங்கள் எல்லாம் இணைக்கப் பட்டு விட்டன. அதன் மூலம் அடுத்த தளையும் நீக்கப் பட்டு விட்டது. அரசியல் சாசனத்தின் மூலம் நமது மக்களுக்கிடையில் எந்த வேறுபாடும் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமம் என்று பிரகடனம் செய்யப் பட்டு விட்டது. அதன் மூலம் நமது நாடும் நாட்டு மக்களும் சுதந்திரமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகப் பட்டிருக்கின்றன.

இப்போது பாரதியாரின் ஆணைப்படி, பெண்கள் முழுமையாக விடுதலைப் பெற்று ஆண்களுடன் சரி நிகர் சமானமாக வாழ்வதற்கு என்ன தடை? ஆண்களும், பெண்களும் சரி நிகர் சமானமாக ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து, காதல் நிரம்பி அன்பு அரும்பி கை கோர்த்துக் கொண்டு போவதில் என்ன தடை? பாலியல் வன்முறைகள் எல்லை தாண்டிய பயங்கர வாதங்கள் சமுதாயத்தில் இன்னும் ஏன் நடைபெறுகின்றன? நமது நாட்டின் உன்னதமான