பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTT LLLL TT LL TTTLLL LTT LLLTT LLLTT LLLSK LLLLLS 19

இருபுறங்களிலும் ஆடி வீதிகளில் ஐயாயிரம் பெண்கள் அணிவகுத்து வரிசையாக அவரவர்களுக்குரிய இடத்தில் ஒளி விளக்குகளுடன் அமர்ந்திருந்த காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. சக்தி கணங்களான நமது நாட்டுப் பெண்களின் தெய்வீக சக்தி அங்கு வெளிபட்டது.

பார்வையாளர் பகுதியில் நான் அமர்ந்து கொண்டு இந்தத் திவ்யமான காட்சியைக் கண்டேன். இந்த அருமையான காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமது நாட்டுப் பெண்களின் தெய்வ பக்தியின் மகாசக்தியை நான் உணர முடிந்தது.

என் அருகில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இரு ஐரோப்பியத் தம்பதியர், சுற்றுலாப் பயணிகளாக மதுரை வந்திருந்தவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் இத்தகைய திவ்யமான காட்சியைக் கண்டிருக்க மாட்டார்கள். மிகுந்த ஆச்சரியத்துடன் திருவிளக்கு பூசையைப் பார்த்துக் கொண்டும் இசை கானத்தைக் கேட்டுக் கொண்டும் இருந்தார்கள். அந்த ஐரோப்பிய தம்பதிகளில் ஒருவர் அருகில் இருந்த என்னிடம் எனக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டார். தன்னை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், பிரஸ்ஸல்ஸ் (பெலிஜியத்தில் தலை நகரம்) நகரில் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாக இருப்பதாகவும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். எனக்கு ஆங்கிலம் தெரியும் என அவரிடம் தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து திருவிளக்கு பூசையைப் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் அந்த ஐரோப்பிய தம்பதியினர் கேட்டார்கள். நானும் அவர்களுக்கு விளக்கு பூசையைப் பற்றியும், அதன் விவரங்களைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். அங்கு பாடப்பட்ட பாடல்களைப் பற்றியும் விளக்கிக் கூறினேன். நான் சொன்ன விவரங்களையெல்லாம் அவர் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொண்டார். மேலும் அவர் என்னிடம் சில