பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

--→

38. நிறைவுாைட --

-

பெயர் விளங்கி யொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்” என்றும், பாரதி பாடிய பிரார்த்தனை என்னவாயிற்று?

இன்னும் நாட்டில் கால்வாசிப் பேருக்குமேல் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நாட்டின் வறட்சியும் வெள்ளமும் நீடிக்கிறது. எந்த வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று ஒரு கவிஞர் பாடுகிறார். தெய்வத்திரு நதிகள் பாயும் இந்தப் புண்ணிய பூமியில் வற்றாத நீர்வளமும், நில வளமும் மனித வளமும் மிகுந்த இந்தத் திரு நாட்டில் வறுமையும் பசி பட்டினியும் ஏன் நீடிக்க வேண்டும்?.

உலகில் லஞ்ச ஊழல் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. ஏன்? உயர் மட்ட ஊழல் நாட்டை பாதிக்கிறது. நடு மட்ட ஊழல் நமது தொழிலையும் வேலையையும், பணிக் கலாச்சாரத்தையும் பாதிக்கிறது. கீழ் மட்ட ஊழல் மக்களை பாதிக்கிறது. உலகிற்கே அறநெறியையும் ஒழுக்க நெறியையும் மனிதாபிமானத்தையும் போதிக்கும் சாத்திரங்கள் நிறைந்த இந்தத் திருநாட்டில் இந்த ஒழுக்கக் கேடுகள் ஏன் நீடிக்கின்றன?

இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன? அவைகளுக்கு விடை காண வேண்டும். அந்த விடை நமது தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் அவை இணைந்த செயல் பாடுகளிலும் இருக்கின்றன. அவைகள் பலவற்றை பாரதியின் கட்டுரைகளில் காணலாம்.

அன்னிய ஆட்சியை அகற்றி நாடு சுதந்திரம் பெறுவதை மட்டும் பாரதி தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. விடுதலையுடன் இதர அரசியல் பொருளாதார, சமுதாயப் பிரச்னைகளையும் லெளகீக