பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அடசினிவாசன்-24)

பெண்களின் கெளரவத்தை உயர்த்த வேண்டும். வாணி பூசை செய்ய வேண்டும்.

வர்த்தகத்தைப் பெருக்க வேண்டும். உள்நாட்டு வர்த்தகத்தையும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் பெருக்க வேண்டும். உள்நாட்டுச் சந்தைகளை, உள்ளுர் சந்தைகளை விரிவுப் படுத்த வேண்டும். நமது இளைஞர்கள், படிப்பாளிகள், தொழில் நுட்ப நிபுணர்கள் பலவகைப் படிப்பாளர்கள் உலகம் முழுவதும் சென்று சம்பாதிக்க வேண்டும். நமது நாட்டுச் செல்வத்தைப் பெருக்க வேண்டும். நமது பெருமையை உலகரியச் செய்ய வேண்டும். நமது மொழிகளையும் இசைகளையும் உலகரியச் செய்ய வேண்டும்.

இவ்வாறான, நாட்டின் முன்னேற்றத்திற்கான பலபணிகளிலும் கூட்டம் கூட்டமாக மக்களைத் திரட்ட வேண்டும். இவையெல்லாம் விடுதலை இயக்கத்தின் பகுதியாகும். சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்ததாகும். இவையெல்லாம் விடுதலை இயக்கம் என்னும் சக்கரத்தில் சுழலும் கால்களும், சுற்று வட்டமும், குடமும் அச்சாணியுமாகும். இவையெல்லாம் இணைந்து செயல்படும் போது அந்த விடுதலை சக்கரம் மாபெரும் சக்தியோடு செயல் படுகிறது என்று பாரதி கருதினார்.

இவைகள் மூலம் நாடு பலப்படும். அறிவு தெளிவடையும். ஒழுக்கம் பெருகும். அமைதி ஏற்படும். உடல்நலம் உடல் பலம் பெருகும். நாட்டு விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் துணையாக இருக்கும் என்று பாரதி கருதினார். இவையனைத்தும் இணைந்ததே தேசபக்தியாகும். அது தனிமரம் அல்ல. அது பெரும்சோலை, அது தெய்வ பக்தி மூலம் உறுதிப் படுகிறது. புனிதப் படுகிறது. இந்த மகத்தான இப்பணிக்கு அனைத்து தெய்வங்களும் துணை நிற்கும்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இவையெல்லாம் இப்போதும் பொருந்தும், எப்போதும் பொருந்தும். இப்போது நாம் சுதந்திரம் பெற்ற