பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-ஆ-சீனிவாசன்-247

துறைக்கும் இடையிலான உறவு தொடர்புகள் பற்றிய பிரச்னைகள் பற்றி டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.அ.சீனிவாசன் இந்தியாவில் பொதுத்துறைக்கும் தனியார் துறையில் உள்ள நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கும் இடையிலான உறவு என்னும் தலைப்பில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்து, அது உலக தொழிற் சங்க ஆவணத்தில் பதிவாகியுள்ளது.

பத்திரிகையாளராக

தொழிற் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் தொழிற் சங்கச் செய்தி ஹார்பர் தொழிலாளி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். கட்சியின் மாநிலத் துணைத் செயலாளராக இருந்த போது கட்சியின் மாநில அமைப்பு நிலைப் பொறுப்பில் இருந்த காலத்தில் கட்சியின் பத்திரிகையான ஜன சக்தி வார இதழ் மற்றும் நாளிதழ்களில் தலைமை ஆசிரியராக எட்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் சித்தாந்த ஏடான மார்கசீய ஒளி மாத இதழின் தலைமை ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

எழுத்துப் பணிகளில்

பத்திகை ஆசிரியராக இருந்த காலத்தில் கட்சி மற்றும் தொழிற் சங்கப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் பல முக்கிய அரசியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் தத்துவ ஞானம் மற்றும் தொழிலாளர், விவசாயிகள் பற்றியப் பிரச்னைகள் பற்றிய பல கட்டுரைகள் எழுதி வந்ததுடன்,

அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவஞானம், சர்வதேசப் பிரச்னைகள் முதலியவை பற்றிய பல தலைப்புகளிலான நூல்களை