பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றிட --- =కీ

மொழி பெயர்ப்பு (தமிழாக்கம்) செய்தும், மூல நூல்கள் எழுதியும் அவை வெளியாகியுள்ளன. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, மார்க்சிய லெனினிய தத்துவ ஞானப் பிரச்னைகள் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள், ஐக்கிய முன்னணித்தந்திரம், மார்க்சீய தத்துவம், வரலாற்றியல் பொருள் முதல் வாதம், மார்க்சீயமும் பகவத் கீதையும் முதலியன அவர் தமிழாக்கம் செய்துள்ள முக்கியமான பெரிய நூல்களாகும். மற்றும் மார்க்சீய பொருளாதார தத்துவம், ஜீவாவின் தமிழ் பணிகள், கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி ஆகிய தலைப்புகளில் மூல நூல்கள் எழுதியுள்ளார். இந்த மூன்று நூல்களுக்கும் முறையே பேராசிரியர் வான மாமலை பேராசிரியர் சஞ்சீவி, பேராசிரியர் நா. தர்மராஜன் ஆகியோர் முன்னுரை எழுதி பாராட்டியுள்ளனர். இவ்வாறு திரு.அ.சீனிவாசன் அப்போது எழுதி வெளியான நூல்கள் சுமார் பதினேழாயிரம் பக்கங்களுக்கு மேலாகும். இவை திரு.அ. சீனிவாசன் அவர்களுடைய எழுத்துப் பணிகளில் அமைதியான சாதனையாகும்.

விருதுகள்

திரு, அ. சீனிவாசன் தனது சிறந்த எழுத்துப் பணி சாதனைகளுக்காக சோவியத் நாடு நேரு விருதும், சிறந்த பத்திரிகைப் பணிகளுக்காக, சமாதானம் சோஷலிஸம் பற்றிய பிரச்னைகள் என்னும் சர்வதேசப் பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் சிறந்த பத்திரிகையாளர் என்னும் கெளரவப் பட்டயமும் பெற்றுள்ளர். அத்துடன் அண்மையில் பாரதி தொடர்பாக அவர் எழுதியுள்ள நூல்களும் தனியார் விருதுகளைப் பெற்றுள்ளன.

தேர்தல்களில் பங்கு

1950-ம் ஆண்டுகளின் கடைசியில் திரு. அ. சீனிவாசன்