பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTyLL LyLy Ty TTy TTTT LLLLLLTTTiSK SSLLLSS S 00

மக்களுக்குள் தொழில் விவசாயம் வியாபாரம் முதலியவற்றில் சேர்மானம் தொடர்புகள் அதிகம். இந்த ஊர்களிலும் குடியிருப்புகளிலும் பல வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

24 மனை தெலுங்கு செட்டியார்கள், தேவர் சமுதாயத்தினர், கொல்லு வேலை தச்சு வேலை முதலிய ஐந்தொழில் ஆச்சாரியார்கள். கொடிக்கால் பிள்ளைமார், கம்பளத்து நாயக்கர் சமூகம், மூன்று பிரிவுகளிலும் உள்ள தலித் மக்கள், முஸ்லிம்கள், சலவையாளர்கள், யாதவர்கள், புலவர்கள், குலாலர்கள், நாடார்கள், இவ்வாறு பல பகுதி மக்களும் கூடி வாழ்கிறார்கள்.

அருள்மிகு ரேணுகாதேவி (எல்லையம்மன்) கோவில் ஆலயம் கட்டி முடித்து பிரதான தெய்வமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இதர பரிவாரங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சென்ற ஆண்டில் மகா சம்ரோகூடிணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. அந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மகா சம்ரோகூடிணத்திற்கும் கோவில் திறப்பு விழாவிற்கும், கோவில் குழுவினர், ஐந்து ஊர்களிலும் குடியிருப்புகளிலும் உள்ள எல்லா சமூகத்தினருக்கும் சாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு அனுப்பி -யிருந்தார்கள். அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து பல வெளியூர்களில் உள்ளவர்களுக்கும் அழைப்பு அனுப்பி அவர்களும் வந்து குழுமியிருந்தார்கள்.

மகா சம்ரோகூடிணம் முடிந்து கோவில் திறப்பு விழாவும் பூஜைகளும் நடந்து கொண்டிருந்த போது அந்த ஊர்களின் அத்தனை சமூகத்தினர்களும், முஸ்லிம்களும், தலித் மக்களும் மற்றுமுள்ள அனைவரும் ஆண்களும், பெண்களும் கோவிலுக்குள் வந்து பரிசுகளும் காணிக்கைளும் செலுத்தினர். இந்த அபூர்வமான