பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LITTÉudor e cowpeo=useo sw:"Leo leppe ocupgrulée (Béguéos: el சீனிவாசன் 25

களவு, ஜாதிப் பாகுபாடுகள், சூது கள்ளச் சாராயம் காய்ச்சுதல், முதலியவைகளை நீக்கவும், அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், அறிவை அபிவிருத்தி செய்வதற்கான நூல் நிலையங்களை படிப்பகங்களை நிறுவிப் பராமரிக்கவும், இசை விளையாட்டு, முதலியவற்றை வளர்க்கவும் கிராம ஒற்றுமையையும் ஒன்றுபட்ட செயல்பாடுகளையும் வளர்க்கவும் வேண்டும்.

குடும்ப அமைப்பு

பாரத சமுதாயத்தின் ஆகச்சிறிய அங்கமாக இருப்பது நமது நாட்டின் குடும்பமும் குடும்ப அமைப்புமாகும். இக்குடும்ப அமைப்பு என்பது இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கிறது. பல குடும்பங்கள் சேர்ந்தது ஒரு ஊர். பல ஊர்கள் சேர்ந்தது ஒரு குறுநாடு. பல குறுநாடுகள் சேர்ந்தது ஒரு பெருநாடு. பல பெருநாடுகள் சேர்ந்தது ஒரு பேரரசு. ஐம்பத்தாறு பேரரசுகள் சேர்ந்தது பாரத தேசம். குறுநாடு, பெருநாடு என்பதை குறுநிலம் பெருநிலம் என்றும் கூறலாம். இந்த அமைப்பில் பாரத தேசம் உருவாகி பலபல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இந்த சமுதாய வளர்ச்சி, மேலை நாட்டு மனித சமுதாய ஆராய்ச்சிக்குட்பட்டதல்ல. பாரத சமுதாயம் மிகவும் தொன்மையானது. மேலை நாட்டு வரலாற்று காலத்திற்கு மிகவும் முந்தியது. எனவே மேலை நாட்டு வரலாற்று வட்டத்திற்குள் அடங்கியதல்ல. இந்த அடிப்படை நமது நாட்டு இன்றைய சிந்தனையாளர்களுக்குத் தெளிவுபடவேண்டும். பாரத சமுதாயத்தின் ஆத்மா நமது வரலாற்றுச் சிந்தயைாளர்களுக்குத் தெளிவு படவேண்டும்.

இவைகள் ஒவ்வொன்றிற்கும் அதாவது குடும்பத்தின் மையமான தனிமனிதர், கணவன் மனைவியின் கூட்டுத் தலைமை,