பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 25

குடும்பத்தின் அங்கங்கள், குடும்பம், குடும்ப அமைப்பு ஊர், குறுநாடு (குறுநிலம்) பெருநாடு (பெருநிலம்) பேரரசு, பாரத தேசம், அவைகளின் தலைமை, தலைவர்கள், அவர்களுடைய குழுக்கள் ஆட்சிக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் கடமைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அக்கடமைகளையே தர்மம், அறம் என்னும் சொல்லின் கருத்தமைவாகக் கொண்டிருக்கிறோம்.தர்மம்-அறம் என்னும் சொல்லிற்கு சமமான சொல் உலகில் எந்த மொழியிலும் குறிப்பாக ஐரோப்பிய மொழிகளில் இல்லை.

இவைகளில் அங்கமாக ஒவ்வொரு மனிதனுடைய கல்வியும் கல்விப் பயிற்சியும் அறிவும் மனப்பண்பாடும் சீராக அமையுமாயின் கடமைகளும் சீராக நிறைவேற்றப்படும். அறம் நிலை நாட்டப்படும். நாட்டில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் தடையில்லாமல் முன் செல்லும் என்பது பாரதியின் சிந்தனையின் சாரமாகும்.

இன்று புதிய பெயர்களில் அரசுகளும் ஆட்சி நிர்வாக அமைப்புகளும் பொது நிர்வாக அமைப்புகளும் உருவாகி வருகின்றன. குடும்ப அமைப்புகள் பல இடங்களில் சிதைந்துள்ளன. அதன் கடமைகள் சரிவர நிறைவேற்றப்படாமல் முடமாகி இருக்கின்றன. குடும்ப அமைப்புகளை புதிய முறையில் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும். அதற்கான கல்விமுறை கொண்டு வரப்படவேண்டும். குழந்தைகள் பராமரிப்பும் சமூகப் பாதுகாப்பு முறையும் அமையவேண்டும். குடும்ப அமைப்புகளைக் கட்டுக் கோப்பாகக் கொண்டு வரவேண்டும்.

குடும்பத்தில் கணவனும் மனைவியும் கூட்டுத்தலைமையாகும். இருவரும் ஒரே மாதிரியான வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். நகரங்களில் வெவ்வேறு தொழில்களில் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். கிராமங்களில் விவசாய குடும்பங்களில்,