பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில்-அரசியல் மற்றும் s gegnu#Ggbšgyszer--et és ferrersöI 27 விவசாயத் தொழிலகங்களில் இன்றும் வேலைப் பிரிவினையில் ஆண்களும் பெண்களும் சேர்ந்துள்ள வேலைகளே நடைபெறுகின்றன. கால் நடைபராமரிப்பில், நெசவுத் தொழிலில், மீன் பிடித்தல் பிடித்த மீன்களைச் சேகரித்தல் ரகம் பிரித்தல் விற்பனை செய்தல், பனை தென்னை தொடர்பான தொழில்கள், கட்டிட வேலை, வியாபாரம் வீட்டு வேலைகள் முதலிய பல தொழில்களிலும், ஆண்கள், பெண்கள் சேர்ந்தும், இணைந்தும், வேலைப் பிரிவினை செய்து கொண்டுமே வேலை நடைபெறுகிறது.

கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி, கணவனும், மனைவியும் வேலைசெய்து, குடும்பப் பொருளாதாரத்தைச் சீரமைத்துக் கொள்கிறார்கள். குடும்பம் இருக்குமிடம் வீடு, என்று ஒரு புனிதமான பெயரைப் பெற்றிருக்கிறது. வீடு என்பது சுவர்க்கம். சுவர்க்கம் இன்பகரமானது. அங்கு அக்குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் உழைப்பிலும், குடும்பத் தேவைக்கான வருவாய் ஈட்டுவதிலும், பொருளுற்பத்தி செய்வதிலும், வீட்டைப் பராமரிப்பதிலும், குழந்தைகளை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும், உடன்பிறந்தோரைக் கரையேற்றுவதிலும், மூத்தோர் நலனைக் காத்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதிலும், சேமிப்பிலும், செலவு செய்வதிலும் நுகர்வதிலும், முதலிய அனைத்திலும் சமநிலையானவர்கள்.

இந்த நமது பாரம்பரியமான பண்பாட்டுச் செழுமைமிக்க சமுதாய வாழ்வில் தலைசிறந்த குடும்ப அமைப்புகளைச் சீரழிய விடாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கான கல்விமுறையும் அமைய வேண்டும். பாரதியார் நமது தேசியக் கல்வியை நமது குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.

நமது செல்வம் என்பது அறிவுச் செல்வம், ஒழுக்கச் செல்வம்,