பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 2 B

பொருட் செல்வம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். அறிவுச் செல்வம் என்பது கல்விப் பயிற்சி மூலமும், மனிதனுடைய செயல்பாடுகளின் அனுபவத்தின் மூலமும் கிடைக்கிறது, சேருகிறது. ஒழுக்கச் செல்வம் என்பது பயிற்சியிலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் உண்டாகிறது. பொருட் செல்வம் என்பது இயற்கை வளம் மனித வளம் ஆகியவற்றின் இணைப்பை அடிப்படையாகக் கொண்ட உழைப்பின் மூலம் கிடைக்கிறது. சேர்கிறது. இவையெல்லாம் பாரத நாட்டின் பாரம்பரியத்தில் குடும்பத்திலிருந்து அதன் செயல்பாட்டிலிருந்து தொடங்குகிறது.

ஆட்சி அமைப்பிலும், ஆட்சி நிர்வாகத்திலும், பொது நிர்வாகத்திலும், நமது பணிகள் குடும்ப அமைப்பிலிருந்து தான் இப்போது தொடங்குகிறது. அங்கிருந்து, கிராமப் பஞ்சாயத்து, ஒன்றியப் பஞ்சாயத்து, மாவட்டப் பஞ்சாயத்து, நகரசபை, மாநகர சபை, மாநில சட்ட மன்றம், பாராளுமன்றம், ஆகிய மக்களாட்சி அமைப்புகளும் இப்போது செயல்படுகின்றன. இந்த மக்களாட்சி அமைப்புகளிலும் அவைகளின் செயல்பாடுகளிலும் நிர்வாக முறைகளிலும் மக்களின் நேரடியான பங்கை மேலும் மேலும் அதிகப்படுத்த வேண்டும், விரிவுபடுத்த வேண்டும், அதுவே பாரதியின் சிந்தனையும் கருத்தும் ஆகும்.

கிராமங்களிலும், நகரங்களிலும், தெருக்களிலும் வட்டங்களிலும், மக்களுடைய நலன்களைக் காக்கவும். அவைகளை மேலுயர்த்தவும், சமுதாய முன்னேற்றத்தை உயர்த்தவும் மக்கள் நேரடியாகப் பங்கு கொள்ள வேண்டிய பல பணிகள் உள்ளன. அடிப்படை சுகாதாரம் கிராம சுத்தம், குடி தண்ணிர், ஆரம்பக் கல்வி ஆலயப் பராமரிப்பு, ஊருணிகள் குளங்கள் பராமரிப்பு, நீர்ப்பாசன ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஏந்தல்கள் மராமத்து, பராமரிப்பு, நூலகங்கள், படிப்பகங்கள், கலை மன்றங்கள், இலக்கிய மன்றங்கள், இசைப்