பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$STsopeumu 30 இந்துக்களின் ஒற்றுமை, இந்துக்களின் சிறப்பு, இந்துக்களின் கூட்டம், இந்துக்கள் என்பவர் யார்? இந்துக்களின் மதிப்பும் மரியாதையும் என்னும் தலைப்புகளில் சிறந்த கருத்துக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பாரதியாரின் கருத்துப்படி இந்து மதம் எனபது ஒரு மதமல்ல. அது ஒரு தர்மம். வாழ்க்கை வழிமுறை. சைவர், வைஷ்ணவர், சாக்தர், சீக்கியர், பார்சி, புத்தர், சமணர், இப்போது வந்துள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், ஆகிய எல்லோரும் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களேயாவர். அன்னிய ஆட்சியாளர்கள் நமக்குள்ளே சில வேற்றுமை உணர்வுகளையும் பகை உணர்வுகளையும் உண்டாக்கி விட்டார்கள். அந்த விரோத உணர்வுகளைத் தவிர்த்து அனைத்து இந்திய மக்களையும் ஒன்று படுத்த வேண்டும் என்பது பாரதியின் கருத்தாக உள்ளது. அனைத்து இந்திய மக்களின் ஒற்றுமைக்கு மையமாக உள்ளது வேதவழிபாடுகளைக் கொண்ட இந்துக்களின் கட்டியான ஒற்றுமை மிகவும் அவசியமாகும் என்பதே பாரதியின் கருத்தாக உள்ளது.

இந்துக்களின் ஒற்றுமையின் மூலம் இதர மக்கள் அனைவருடைய ஒற்றுமையுைம் நலன்களையும் பாதுகாக்க முடியும். பெரும்பான்மை மக்களுடைய உணர்வுகளுக்கு மாறாக, எதிராக, அவர்களுடைய நலன்களுக்கும் நல்லெண்ணங்களுக்கும் எதிராக சிறுபான்மை மக்கள் என்பவர்கள் நடந்து கொள்வது என்பது அவர்களுக்கே நல்லதல்ல.

நமது நாட்டில் இன்றைய நிலையில் உண்மையில் சிறுபான்மையினர் என்பவர் யாருமில்லை. மத உரிமைகள் என்று கூறுவதானால், உலகில் வேறு எந்த நாட்டைக் காட்டிலும் பாரதத்தில் மத உரிமைகளும், வழிபாட்டு உரிமைகளும் அதிகமாகவே உள்ளன. அனைத்து மக்களுக்கும் வழிபாட்டு உரிமை முழுமையாக உள்ளது என்று கூறலாம். இங்குதான் எம் மதமும் சம்மதம் என்னும் உயர்ந்த