பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lmá5udor e-opeo-udeo enfuso ubppe Soesnuss-Gégosst-se. சீனிவாசன் 31

கோட்பாடு உருவாகியுள்ளது.

தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், குரல் வளம், இசைக் கருவிகள், ராகம் தாளம், சங்கீத சபாக்கள், நவரசம், பாட்டுக் கச்சேரிகள், கீர்த்தனைகள், நமது கீர்த்தனைகள், நமது இசையின் மேன்மை, அதை உலகரியச் செய்ய வேண்டிய நமது கடமை, முதலியன பற்றியெல்லாம் பாரதி தனது உரைநடைக் கட்டுரைகளில் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

பெண்உரிமை, ஆண் பெண் சமத்துவம், சரி நிகர் சமானம், வரதட்சணைக் கொடுமை, பெண் கல்வி, பெண்ணின் பெருமை, முதலிய பெண்களின் தனிப் பிரச்னைகளைப் பற்றி மிகவும் மேலான கருத்துக்களை மகாகவி தனது கட்டுரைகளில் கூறுகிறார்.

சாதி ஒழிப்பு, சாதி சமத்துவம், சாதிக் கொடுமைகள், சாதி வேறுபாடுகளை மற்றும் பாகுபாடுகளைக் களைதல், இந்துக்களின் ஒற்றுமை, ஆகியவை பற்றித் தனது கவிதைகளில் கூறியுள்ளதைப் போலவே தனது உரைநடைக் கட்டுரைகளிலும், பாரதி தனது வலுவான கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளார்.

தேசியக் கல்வி பற்றியும், நமது வளமான தொன்மையான நாகரிகச் சிறப்பு பற்றியும் பாரதி தனது கட்டுரைகள் பலவற்றிலும் எழுதியுள்ளார். சில தனிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ் மொழி வழிக் கல்வியின் அவசியம், பற்றியும், தமிழில் அனைத்துப் பாடங்களையும் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும் என்பது பற்றியும் தனது உறுதியான கருத்துக்களை பாரதி எழுதியுள்ளார்.

தேசியக் கல்வி பற்றியும், பொதுவாகக் கல்வி, பாடத்திட்டம், ஆரம்பக் கல்வி பற்றியெல்லாம் பாரதி கூறியுள்ள கருத்துக்களை யெல்லாம் பற்றித் தனி நூல் கொண்டு வர வேண்டும். அது