பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1_பாரதியின் உரைநடை 34

விலங்குகள் பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்திடல் வேண்டும்” எனவும், 'பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும் மிடிமையும், நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிர் எல்லாம் இன்புற்று வாழ்க’ என்றும், நாட்டின் விடுதலை -யையும் நாட்டு மக்களின் நல் வாழ்வையும் மனதில் நினைந்து உளமுறுகிப் பாடுகிறார்.

“துன்பமும், நோயும் மிடிமையும் திர்த்துச் சுகமருளல் வேண்டும்” என்று கண்ணன் பாட்டிலே குறிப்பிடுகிறார்.

பாரதி பாஞ்சாலி சபதத்தில் வலுவான அரசியல் கருத்துக்களை

எடுத்துக் கூறுகிறார்.

"நாட்டுமாந்தர் எல்லாம் - தம்போல்

நரர்கள் என்று கருதார்

ஆட்டுமந்தையாம் என்-றுலகை

அரசரெண்ணி விட்டார்

காட்டும் உண்மை நூல்கள் - பலதாம்

காட்டினார்களேனும்,

நாட்டு ராஜநிதி - மனிதர்

நன்கு செய்யவில்லை” என்றும்,

“ஒரஞ்செய்திடாமே - தருமத் துறுதி கொன்றிடாமே சோரஞ்செய்திடாமே- பிறரைத் துயரில் விழ்த்திடாமே ஊரையாளும் முறைமை - உலகில் ஒர். புரத்துமில்லை” - என்றும்,

‘பேயரசு செய்தால் பினம் தின்னும் சாத்திரங்கள்” என்றும் பாரதி உறுதிபடப் பேசுகிறார்.