பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் Lesopup_#(PÉTuës(BĚgjësen- et *sofiarzsöI 35

2. நம்பிக்கை என்னும் தலைப்பில்

பாரதியார் ஒரு ஆத்மஞானி. அவர் ஜீவன் முக்தராக விளங்கினார். அவர் தனது சிந்தனையிலும், செயல்பாட்டிலும் சுதந்திரமாக இருக்க விரும்பினார். அதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவருக்கு அவருடைய பணிகளில் பல இடையூறுகளும், தடைகளும், கட்டுப் பாடுகளும் இருந்தன. அவர் சுதேசமித்திரனில் பணியாற்றிய போது, அவருடைய விருப்பப்படி அவருடைய உள்ளத்தில் எழுந்த கருத்துக்களை உள்ளுணர்வோடு எழுதுவதற்கு முடியாதபடி பல உத்தரவுகள் இருந்தன. துணையாசிரியராகவே பணியாற்றினார். அவருடைய பல கட்டுரைகளும் செய்திக் குறிப்புகளும், விமர்சனக் குறிப்புகளும் பலருடைய பார்வைக்குப் பின்னரேயே அச்சுக்குப் போகும். தலையங்கம் எழுதுவது முதலிய முக்கியமான கொள்கைப் பிரச்சைகளில் அவருக்கு சுயேச்சையாகத் தன் உணர்வுப்படி எழுதுவதற்கு வாய்ப்பு இல்லை. அனுமதியில்லை. இவையெல்லாம் வேண்டுமென்றே அவர் மீது திணிக்கப்பட்டக் கட்டு திட்டங்கள் அல்ல.

சுதேசமித்திரன் பத்திரிகை விடுதலை இயக்கத்தின் ஆதரவுப் பத்திரிகை. ஆங்கிலேய அரசாங்கத்தின் பார்வையும் கட்டுப் பாடும் தொல்லையும் தொந்தரவுகளும், வழக்குகளும், கெடுபிடிகளும் அடக்குமுறை ஏவுகணைகளும் அந்தப் பத்திரிகை மீது தொடர்ந்து இருந்து கொண்டிருந்தன. இத்தனை முள்வேலிகளையும் தாண்டி சுதேசமித்திரன் பத்திரிகை தேச விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டியதிருந்தது.

பாரதியாரோ தேசிய இயக்கத்தில் தீவிரவாதப் பிரிவின் ஆதரவாளர். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, வா.வே.சு. அய்யர் முதலிய பல தீவிரவாதிகளுக்கு ஆதரவாளராக இருந்தவர். அவருடைய எழுத்துக்களில் கவிதைகளில் வேகம் இருந்தது.