பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் вроде S GPSTu...éægSSSSæSr-->: சீனிவாசன் 37

கொள்கைகளை ஸ்தாபித்துள்ளார்கள். மனித சமுதாயத்திற்கு நன்மை தேடித் தந்திருக்கிறார்கள்.

இராமானுஜர் கணக்கில்லாத கஷ்டங்களைத் தாங்கி, வைணவத்தை நிலைநிறுத்தினார். நானா ஜாதி மக்களையும் திருமால் பக்தியில் ஈடுபடுத்தினார். ஜாதி வேறுபாடுகளை எதிர்த்து ஒற்றுமை உண்டாக்கி தீண்டாமையை எதிர்த்துப் போராடி சமத்துவத்திற்காகப் பாடுபட்டார். இராமானுஜருடைய வரலாற்றை எடுத்துக் கூறி பாரதி நமது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

திருநாவுக்கரசரின் வைராக்கியத்தையும் உறுதிப் பாட்டையும் நம்பிக்கையையும் எடுத்துக் கூறி விளக்கினார். “கற்றுனைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே” என்று அப்பரடிகள் கூறியதை நினைவுபடுத்தி நமக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

சிவாஜி, இந்து ராஜ்யத்தை நிறுவிய சாதனையை எடுத்துக் கூறுகிறார். நமது தேசத்தார்கள் வேறு பல முயற்சிகள் எடுத்து வருவதையும் சுட்டிக் காட்டி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு

நம்பிக்கை ஊட்டுகிறார்.

“இக்காலத்தில் பலர் நமது பாஷைகளை ஒளிமிகச் செய்து பூமண்டலத்தார் வியக்கும்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். பலர் நமது பூர்வ சாஸ்திரங்களின் உண்மையை உலகம் முழுவதும் கேட்டு உஜ்ஜீவிக்கும்படி செய்ய வேண்டுமென்று பாடுபடுகிறார்கள். பலர் நமது நாட்டு செல்வத்தை வெளியேற வொட்டாமல் தடுக்க வழிதேடுகிறார்கள். (அன்னிய ஆட்சியின் காரணமாக நமது நாட்டுச் செல்வம் கொள்ளை போகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்று பலர் பாடுபடுகிறார்கள்).