பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் Lepple *([PĒTuëëqКgāëseT-et. *coflorersör 39

புகை பிடித்தல் உடலுக்குக் கெடுதல் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் புகை பிடிப்போர் பலரும் அதைக் கைவிட இன்னும் ஏன் மறுக்கிறார்கள்?

கள்ளு, சாராயம் குடித்தல் கேடுவிளைவிக்கும் என்று தெரிந்தும் ஏன் இன்னும் குடி நிற்கவில்லை? மேலும் கள்ளச் சாராயம், விஷச்சாராயம் ஏன் நாட்டில் நடமாடுகிறது? அதனால் பல பாதிப்புகளும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டும் ஏன் அந்தக் கொடும் பழக்கம் நிற்கவில்லை?

மத போதனைகள் பல நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றன. அப்படியிருந்தும் ஏன் மத வெறியாட்டங்களும் மதக் கொலைகளும் நிற்கவில்லை?

நமது சாதி அமைப்புகளும் சாதிப் பாகுபாடுகளும் சாதி வேறுபாடுகளும் பொதுக் கருத்துக்களில் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. ஆயினும் நடைமுறையில் நீடிக்கிறது. சாதி அமைப்புகளுக்கு சாஸ்திர சம்மதமில்லை. பிறப்பால் ஜாதியில்லை. குணத்தாலும் செய்கையாலும் தான் வர்ணங்களின் வேறுபாடுகள் எடுத்துக் காட்டப்பட்டன. ஆனால் அந்த நல்ல கருத்துக்கள் நாசப் படுத்தப்பட்டு, சாதி அமைப்புகளும் வேறுபாடுகளும் தொடர்கின்றன. சாதி வேறுபாடுகளும், பாகுபாடுகளும் உயர்வு தாழ்வுகளும் தோன்றிய காலத்திலிருந்தே அதற்கு எதிரான கருத்துக்களும், போராட்டங்களும், கிளர்ச்சிகளும் நடந்து வந்திருக்கின்றன.

நமது அரசியல் சட்டத்தின் படி அனைவரும் சமம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தத் துறையில் நடைமுறையிலும் பல முன்னேற்றங்களும் அபிவிருத்திகளும் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், வேறுபாடுகள், பாகுபாடுகளின் மிச்ச சொச்சங்கள் நமது நாட்டையும் சமுதாய வாழ்வையும் களங்கப் படுத்திக்

கொண்டிருக்கிறது.