பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நம்பிக்கை என்னும் தலைப்பில் 40

ஆண் பெண் சமத்துவம், சம உரிமை பற்றி அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் பாகுபாடுகளும், கொடுமைகளும், நீடிக்கின்றன. பல துறைகளிலும் ஆணாதிக்கம் நீடிக்கிறது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் நீடிக்கின்றன. சமத்துவம், சமஉரிமை என்பது பல துறைகளிலும் சொல்லளவிலேயே இருக்கிறது.

பாரதி தன்னுடைய வாசக ஞானம் என்னும் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“வியாபாரம், கைத்தொழில், ராஜாங்க சீர்திருத்தம், ஜனசமூகத் திருத்தம் முதலிய லெளகீக விவகாரங்கள் எல்லா வற்றிலும் மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்து விட்டனர். ஒரு துறை அல்லது ஒர் இலாகாவைப் பற்றிய ஸ9கூடிம தந்திரங்களை மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால் அந்தந்த நெறியில் பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனையதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.

“பொதுவாகக் கூறுமிடத்தே மனித ஜாதியார் அறிவு சம்மந்தப் பட்ட மட்டில் மகா ஸஅகூடிமமான பரம சத்தியங்களை -யெல்லாம் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமையற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும் சித்த சுத்தி ஏற்பட வழியில்லாமல் இருக்கிறது. எனவே அறிவினாலே எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக இருக்கிறது” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

பாரதியார் இந்தக் கட்டுரையில் தாயுமானவர் பாடல் ஒன்றையும் வள்ளுவரின் குறட்பாக்களையும் எடுத்துக் காட்டாகக் கூறி விளக்குகிறார்.