பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLLL LLLLL LS TLLLLS LCL LLLLLLLLTTCAAA LLLSAAAAAAS LLLLLLS 4T

"வாசக குானத்தினால் வருமோ எUகம் பாழ்ந்த பூச லென்று போமோ புகலாய் பராபரமே”

- தாயுமானவர்.

இதன் பொருள் “வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்த மெய்த முடியவில்லையே? என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும் கடவுளே! நீ அதனைத் தெரிவிப்பாய்.”

"சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் சொல்லிய வண்ணம் செயல்.”

-திருவள்ளுவர்.

"#. இதன் பொருள் “வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சொல்லின் படி நடத்தல் துர்லபம்’

இக்கட்டுரையில் பாரதி 'வியாபாரம், கைத்தொழில், ராஜாங்க சீர்த்திருத்தம், ஜன சமூகத்திருத்தம், முதலிய லெளகீக விவகாரங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த லெளகீக விவகாரங்கள் இக்காலத்தில் மேலும் மேலும் விரிவடைந்து மனித சமுதாயம் முழுவதையும் கவர்ந்திருக்கிறது. இதில் குறிப்பாக அரசியல் விவகாரங்கள் அனைத்தளாவியதாக, உலகளாவியதாகப் பரவி நம்மைச் சூழ்ந்து நிற்கிறது. வெளிநாட்டு உறவு, ஐக்கிய நாடுகள் சபை, விவகாரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், கலாச்சாரப் பரிவர்த்தனை, உலக வங்கி, சர்வதேச நிதிநிறுவனம், உலக வர்த்தக நிறுவனம் முதலியன உள் நாட்டுப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், அமைதியான சமூதாய வாழ்க்கை, உள் நாட்டுப் போக்குவரத்து, சாலை, ரயில், கப்பல், விமானப் போக்குவரத்துக்கள், பொருளுற்பத்தி, (தொழில், விவசாயம், கால்நடை, மீன் பிடித்தல்,