பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உயிரின் ஒளி 45

3. உயிரின் ஒளி:

உயிரின் ஒளி என்னும் தலைப்பில் பாரதியார் ஒரு சிறந்த கட்டுரை எழுதியுள்ளார். இந்தியாவில் கொல்கத்தாவில் ஜெகதீஷ் சந்திரவஸ என்னும் உலகப் புகழ் பெற்ற சிறந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அவர் ஜெகதீஷ் சந்திபோஸ், ஜே.ஸி.போஸ் என்று பிரபலமாக அழைக்கப் பட்டார். அன்னிய ஆட்சி காலத்திலே உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள், சர்.சி.வி.ராமன், கே.எஸ்.கிருஷ்ணன், கணித மேதை இராமானுஜன், ஜே.ஸி.போஸ், பி.சி.ராய் முதலியோர் பிரபலமான இந்திய விஞ்ஞானிகளாக விளங்கினார்கள். இவர்களுடைய அரிய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் உலகப் புகழ் பெற்றிருக்கின்றன.

. ஜே.ஸி.போஸ் அவர்கள் கொல்கொத்தாவில் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தை அமைத்திருந்தார். அதற்கு வஸ மந்திரம் என்று பெயர். அந்த ஆராய்ச்சிக் கூடத்தை பாரத மாதாவிற்குச் சமர்ப்பணம் செய்து ஒரு உரை ஆற்றியிருந்தார். அந்த உரையை பாரதியார் தனது கட்டுரையில் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.

“சில தினங்களுக்கு முன்பு கொல்க்கொத்தாவில் ரீ ஜெகதீஷ் சந்திர வஸ் தமது வஸ் மந்திரம் என்னும் ஆராய்ச்சிக் கூடத்தைப் பாரத மாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில் “உயிரின் ஒளி” என்ற மகுடம் இட்டு ஒரு பிரசங்கம் செய்தார்” என்று பாரதியார் தனது கட்டுரையைத் தொடங்குகிறார்.

“அவருடைய கொள்கை எப்படியென்றால் நாம் ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர் நிறைந்திருக்கிறது. ஜந்துக்களைப் போலவே விருகூடிாதிகளுக்கும் உணர்விருக்கிறது. ஆகவே மண், செடி, ஜந்து, மனுஷ்யன் அத்தனைக்குள்ளும் ஒரேவிதமான பிராண சக்தி இருக்கிறது. இந்த உலகமே உயிர்க் கடல்” என்பது அவரது சித்தாந்தம். அவர் பல