பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.-உயிரின்-ஒளி 48

சிறியதும் வரம்புற்றதுமாகிய ஒரு பொருளினால் பாரத மாதா திருப்தி அடைவாளா? இவளுடைய அற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும் செயல்களையும் யோசிக்கும் போது தாழ்ந்த தரமுள்ளதும் சில நாள் நிற்பதுமான லாபமொன்றை இவள் விரும்ப மாட்டாள் என்பது தெரியும்.

“இப்போது நம் கண்முன்னே இரண்டு விதமான தர்மங்கள் காணப் படுகின்றன.

“முதலாவது (ஐரோப்பியர்களைப் போல நாமும்) படிப்பின் பரவுதலாலும் நகரத்தாருக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத் தொழில் வியாபார சம்பந்தமான பலவித முயற்சிகளாலும் பாரத நாட்டை வலிமையுடைய நாடாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கியாம்சங்கள். இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும். வாழ்க்கையிலே ஜயமும் அவனவன் தன்தன் அவாவைத் திருப்தி செய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால் அதிலிருந்தே மேற் கூறிய லெளகீக தர்மத்திற்குத் துண்டுதல் உண்டாகும்.

“இரண்டாவது, ஆத்ம தர்மம். கூடினமாயிருக்கும் இன்பங்களை மாத்திரம் கருதாமல் மனுஷ்ய வாழ்க்கையின் அதியுன்னதமான நோக்கத்தை நாடி உழைத்தவர்கள் நமது நாட்டில் எக்காலத்திலும் மாறாமல் இருந்து வருகிறார்கள்.

"ஆத்ம தர்மமாவது யாதென்றால் ரீவஸு சொல்கிறார் “மனுஷ்ய ஜாதியின் பரம கூேடிமத்திற்காக ஒருவன் தன்னைத் துறந்து விடுதல்” என்று வந்தேமாதரம். இந்த தர்மத்தை எக்காலத்திலும் இடை விடாமல் ஒரு சிலரேனும் ஆதரவு செய்து வந்தமையால் தான் அஸ்ஸிரியா தேசத்திலும் நீல நதிக்கரையிலும் தலை தூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்து போயின. நாம் அழியாமல் என்றும்