பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உயிரின் ஒளி 50

சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபம் என்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப்பதால் விளையும்” என்றார் என்பதை பாரதியார் குறிப்பிடுகிறார்.

அத்துடன் ஜகதீச சந்திர வஸ முன்னொரு முறை சில வருஷங்களுக்கு முன் லண்டன் நகரத்தில் உள்ள 'ராயல் சொஸைட்டி” என்னும் சாஸ்திர சங்கத்தில் பேசிய உரையைக் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையின் தமிழாக்கம் ஸ்வலி கீதங்களின் பேசாத ஸாகூவியத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும் தன்னுள்ளே கொண்ட ஏக வஸ்துவின் கலையொன்றை அங்கே கண்டேன். ஒளியின் சிறு திரைகளுக்கிடையே தத்தளிக்கின்ற துரும்பும் பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும், நமது தலை மேலே சுடர் வீசும் ஞாயிறும் எல்லாம் ஒன்று. இதைக் கண்ட # பொழுதே மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பு என் முன்னோர் கங்கைக் கரையிலே முழங்கின வாக்கியத்திற்குச் சற்றே பொருள் விளங்கலாயிற்று. இந்த ஜகத்தின் பேத ரூபங்களில் ஒன்று காண்பார் எவரோ அவரே உண்மை காண்பார். பிறர் அல்லர், பிறர் அல்லர். இதுதான் ஜீவஒலி. வாயு பகவானுடைய ரீமுகவாக்கியம். எல்லாவற்றிலும் ஒருயிரே அசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை. பயம் தீர்ந்தால் சாவில்லை. அமிர்தம் ஸ்தா” என்று ரீமான் வளலபேசியதை மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

றுநீஜகதீச சந்திர வஸ ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல. இந்து தர்மத்தில் திளைத்த மகாஞானி. அவர் மனிதனுடைய உயிர்த் துடிப்பை மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து பொருள்களிலும் உள்ள உயிர்த் துடிப்பை விஞ்ஞான பூர்வமாகக் கண்டு உலகிற்குக் காட்டி நிரூபித்துத் தெளிவு படுத்தினார். அதன் மூலம் பாரதத்தின் விடுதலை பற்றியும் உலகின் விடுதலை பற்றியும் சிந்தித்தார்.