பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TCLS CTMS LLS CLLLLS CCCLL LLLLLLLyTTySK LyLLLL SS L0

இவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல மேற்கத்திய வல்லரசுகள் அசுரத்தனமான ஆயுத பலத்துடன் வளர்ந்தன. அவர்களுக்குள் வியாபாரப் போட்டி தொழில் போட்டிமட்டுமல்லாமல் காலனி ஆதிக்கப் போட்டியும், ஆயுதப் போட்டியும் ஏற்பட்டு இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே இரண்டு பெரிய உலகப் போர்கள் நிகழ்ந்து பல கோடிக்கணக்கான மக்கள் போர்களினால் மாண்டு போனார்கள். பல நாடு நகரங்களும் ஆயிரக்கணக்கான தொழிற் சாலைகளும் நாசமாயின, வயல் வெளிகள் அழிந்தன.

இக்கால முழுவதிலும் ஆசிய ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் பலவற்றில் கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் அந்தப் பகுதி மக்களை நாகரிகப் படுத்துவதாகக் கூறி பல கொடுமைகளைச் செய்தும், ஏமாற்றியும், ஆசை வார்த்தை காட்டியும், அச்சுறுத்தியும், உள்ளுர் மக்களை மத மாற்றங்கள் செய்தும் பல மோசடிகளும்

நடை பெற்றுள்ளன.

பொருளாதாரத் துறையில் வளர்ச்சியடைந்துள்ள இந்த நாடுகள் தங்களை வல்லரசுகளாகவும், நாகரிகம் மிகுந்த நாடுகளாகவும் அறிவித்துக் கொண்டு உலக நாடுகள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.

இந்த ஐரோப்பிய நாகரிகங்கள் காரணமாக உற்பத்திச் சக்திகள் அபரிமிதமான அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த போதிலும் உலகம் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தால் நாசத்தின் விழிம்பிலும், இயற்கைச் சூழல்களின் கடுமையான பாதிப்புகளிலும் நின்று கொண்டிருக்கிறது. உலகத்தையே பலமுறை நாசம் செய்வதற்குரிய சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பெருகியுள்ளன. இயற்கை சக்திகள் மலைகள், ஆறுகள், காற்று, கடல், பூமி, ஆகாயம் முதலியவைகள் எல்லாம் அளவுக்கு அதிகமாக மாசுபட்டு இயற்கைச்