பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்

ĽA

முன்னுரை:

பாரதி ஒரு மகாகவி என்பதை நாம் அறிவோம். அதனாலேயே அவரை மகாகவி பாரதியார் என்று அடைமொழியிட்டு அழைக்கிறோம். பாரத நாடும் அவரை மகாகவி என்றும் மேலும் மேலும் அதிகமாக அங்கீகரித்து வருகிறது. பாரதி பெயரில் பாரதத்தின் தலைநகரான டில்லியில் தெருவும் அமைந்திருக்கிறது. பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியாரின்

திருவுருவப்படம் அலங்கரிக்கிறது.

தமிழ்மொழி செம்மொழி என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழியின் உலக அந்த ஸ்தும் உயர்ந்து வருகிறது. மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. பாரத நாட்டின் பல வேறு நகரங்களிலும், மற்றும் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளிலும் நகரங்களிலும் வாழும் தமிழ் மக்கள், தமிழ் மொழி பேசும் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் மொழியின் சிறப்புகளையும், தமிழ் நாட்டின் தனிச் சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் அதன் பண்பாடுகளையும், பாரம் பரியங்களையும், வரலாற்றுச் சிறப்புகளையும், பாரத நாட்டின் பொதுச் செல்வத்திற்கு தமிழ் செலுத்தியுள்ள பங்கினைப் பற்றியும் உலகரியச் செய்யத் தங்களால் இயன்றதனைத்தையும் செய்ய முற்படும் போது தமிழ் மொழியின் உலக அந்தஸ்தும் பெருமையும் மேலும் அதிகமாக உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.