பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் prope *(Pzrušs Pšgëësit--et சீனிவாசன் 57

பலியாகியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கோவில்களும், வழிபாட்டு ஸ்தலங்களும் அழிக்கப் பட்டன. மக்கள் நிர்பந்தமாக மத மாற்றம் செய்யப் பட்டு பல லட்சக்கணக்கான பள்ளிவாசல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் இந்த மண்ணில் கட்டப் பட்டன. ஹிந்து தர்மத்தை அழிக்கவும், பல முயற்சிகள் செய்யப் பட்டன. ஆயினும் ஹிந்து தர்மம் அழியவில்லை என்பதுமட்டுமல்ல, மேலும் வலுவான ஆன்மீக பலத்துடன் பாரத மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மண்ணிற்கு வந்த அத்தனை கருத்துக்களையும் கிரகித்து, ஜீரணித்துத் தனதாக்கிக் கொண்டுமிருக்கிறது. மாறுபட்ட வழி பாட்டு முறைகளும், காலப் பயணத்தில் தனது தனித் தன்மையையும் தனி அடையாளத்தையும் இழந்து பொது நீரோட்டத்தில் கலந்து பாரத மயமாகியிருக்கிறது. சில வரலாற்று உண்மைகளை நினைவு படுத்திக் கொள்வதற்காகவே பழைய நிகழ்ச்சிகளை இங்கு நினைவு படுத்துகிறோம்.

இந்து தர்மத்திலும் சில பலவீனங்களும் விதியின் பிழைகளும் நிகழ்ந்திருக்கின்றன. அதையும் பாரதி நமது விடுதலை சிந்தனையில் நினைவு படுத்திக் கூறுகிறார்.

சிந்தையில் அற முண்டாம் - எனிற்

சேர்ந்திடுங்கலி செயு மறமு முண்டாம்

என்று பாஞ்சாலி சபதம் என்னும் நூலின் கவிதையில் குறிப்பிட்டு அதற்குக் கீழ்க்கண்ட விளக்கமும் கூறுகிறார்.

“ஒரு சங்கத்தின் ஒரு ஜாதியின் ஒரு தேசத்தின் அறிவு மழுங்காதிருக்கும் வரை, அதற்கு நாச மேற்படாது. பாரத தேசத்தில் முற்காலத்தில் பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால்