பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5_2migo_gimnéÉloir_Stosinou 5B

மற்ற குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். மஹா பாரதப் போர் நடந்திருக்காது. பாரத தேசத்தில் பெரியதோர் கூடித்திரிய நாசமும் கலியும் வந்திருக்க மாட்டா. ஒரு தேசத்தில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அந்த தேசத்திலுள்ள பிராமணர்களே பொருப்பாளி களென மேலே குறித்திருப்பதை விளக்கும் பொருட்டு மஹா பாரதப் போர் நடக்குமுன்பாகவே முதற் படப்பாவம் பிராமணருக்குள் புகுந்தது என்பதை நூல் தெரிவிக்கிறது.

மஹா பாரதப் போர் என்பது பாரத தேசத்திலிருந்த ஐம்பத்தாறு தேசத்து அரசர்களும் கலந்து கொண்ட மா பாரதப் போர். அந்தப் போரில் மிகப் பெரிய அளவிலான கூடித்திரிய நாசம் ஏற்பட்டது. வல்லமை மிக்க பெரிய வீரர்களும் சூரர்களும் போரில் மாண்டு போயினர். அதனால் மிகப் பெரிய அளவிலானதொரு கூடித்திரிய நாசம் ஏற்பட்டது. அதனால் பாரதத்தின் தோள் வலிமை குன்றியது.

அதே போல கூடித்திரிய அரசர்கள் சிலர் தவறு செய்த காரணத்தால் ஜமதக்கினி முனிவரின் குமாரன் பரசுராமன் தனது வல்லமை மிக்க ஆயுதத்தின் வலிமையால் ஆயிரக்கணக்கான கூடித்திரிய மன்னர்களைக் கொன்றான். அது பற்றி, 'பூதலத்து அரசையெல்லாம் பொன்று வித்தனை” என்று இராமபிரான் பரசுராமனிடம் கூறுவதைக் கம்பன் தனது மகாகாவியத்தில் குறிப்பிடுகிறார்.

அக்காலத்தில் ஏற்பட்ட கூடித்திரிய நாசத்திற்குக் காரணமான பரசுராமன், இராமனை சந்தித்த போது ஒரு சமரசம் ஏற்பட்டு பரசுராமன் தனது தவ வலிமையனைத்தையும் தனது வல்லமை மிக்க விஷ்ணுதனுசையும் இராமனிடம் ஒப்படைத்து விட்டு வனம் சென்று விட்டான்.

இங்கு பாரதி குறிப்பிடும் பிராமணர் என்பது இக்காலத்து ஜாதியைக் குறிப்பிடவில்லை. பாரதத்தின் அறிவுக் குத்