பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTT LSLTT LLL TT LLLL LLLLLL LLLLLLLLLLLLLLSK SLLLS00

தலைமையானவர் குணத்தாலும் செய்கையாலும், சீலம் அறிவு தர்மம் ஆகியவற்றாலும் உயர்ந்தவர்களே பிராமணராவார்கள். இன்றைய பாரதத்தில் படித்தவர்கள், அறிவுக்கு உடைமையானவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், என்ஜினியர்கள், டாக்டர்கள், கணக்கியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர்களெல்லாம் தொழிலால் பிராமணர்கள். இவர்கள் நமது பாரத தர்மத்தின் படி தங்கள் கடமைகளைத் தவறாது செய்ய வேண்டும். அதே போல கூடித்திரியர்கள் என்பவர்கள் ஆட்சிப் பொறுப்பில், அரசியல் கட்சிகளில் அரசியல் அதிகாரத்தில் நாட்டுப் பாதுகாப்பில், காவல் துறையில் உள்ளவர்கள், நமது ஹிந்து தர்மத்தின் படி தங்கள் கடமைகளைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.

இன்றைய வைசியர்கள் என்பவர்கள், தொழில் விவசாயம் மற்றும் பல துறைத் தொழில் உற்பத்தியில் சேமிப்பில் அவைகளின் பாதுகாப்பில் வினியோகத்தில் உரிமையாளர்களாக இருந்து நாட்டுப் பொருளாதாரத்தை நிர்வகிப்பவர்கள். அவர்கள் தங்கள் தொழில் கடமைகளையும், பொருளுற்பத்திக் கடமையிலும் சமுதாயப் பொறுப்புகளிலும் சரிவரத் தங்கள் கடமைகளை நிறை வேற்றுபவர்கள்.

இன்றைய சூத்திரர்கள் என்பவர்கள் எல்லா வகையான உழைப்பிலும் சேவைத் தொழில்களிலும் உள்ளவர்கள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றி வருபவர்கள்.

இவர்கள் எல்லாம் அவரவர் தொடர்பு கொண்டுள்ள கடமைகளைத் தவறாமல் சரிவர நிறைவேற்றுவார்களானால் பாரத

நாட்டின் வேகமான முன்னேற்றத்திற்கு எந்தவிதமான தடையுமில்லை.

xx xx xx