பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமுழுமையான_விடுதஉை(பரிபூான-குதந்திரம் 60

5-முழுமையான விடுதலை: (பரிபூரண சுதந்திரம்)

பாரதி விடுதலை பற்றிப் பேசும்போது மனித ஜாதி முழுவதினுடைய முழுமையான விடுதலையைப் பற்றிப் பேசுகிறார். பாரத நாட்டின் முழுமையான விடுதலையைப் பற்றிப் பேசுகிறார். அரசியல் அடிமைத் தனத்திலிருந்து, அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை என்பது மட்டுமில்லாமல் பொருளாதார விடுதலை, சமுதாய விடுதலை, சமூகநீதி, பெண் விடுதலை, எழுத்தறிவின்மையிலிருந்து (கல்லாமையிலிருந்து) விடுதலை, அறியாமையிலிருந்து விடுதலை, முதலிய அனைத்து அம்சங்களிலும் பரிபூரணமான விடுதலையைப் பற்றி சிந்திக்கிறார், பேசுகிறார், எழுதுகிறார். அதனால் இந்திய நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது பரிபூரண சுதந்திரம் என்னும் சொல்லும் கோரிக்கையும் எழுந்தது.

பாரத நாட்டின் சிந்தனையே மனித குலம் முழுவதினுமான முழுமையான விடுதலையேயாகும். அதன் புருஷார்த்தங்கள் நிறைவேறும் போது மனிதகுலத்தின் முழுமையான விடுதலை லட்சியம் நிறைவேறுகிறது.

பாரதியார் தமிழருக்கு என்று ஒரு தனிக் கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் தமிழ் மக்களை உணர்வு பூர்வமாக, உணர்ச்சி ததும்பத் தட்டி எழுப்புகிறார்.

“தமிழா! தெய்வத்தை நம்பு. பயப்படாதே! உனக்கு நல்ல காலம் வருகிறது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வம் கண்ட கவிகள், அற்புதமான சங்கீத வித்வான்கள், கை தேர்ந்த சிற்பர், பல நூல்வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்து விட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய் பார்.