பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TCL CS 00CLL LL LCCLLLS CCCLL LLLLLLLTTTLLLLSK SS LLLLLL 51

“நமது நாட்டு ஸ்திரிகளிலே பலர் சக்திக் கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். ஒளி, சக்தி, வலிமை, வீரியம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றன,

தமிழா! பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடுசெய்.

ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே! “ஜாதியிரண்டொழிய வேறில்லை” என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்.

பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் பெண்ணை வாழ்க்கைத் துணை என்றார்கள். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆனும், பெண்ணும் சமம்.” என்று பாரதி கூறுகிறார். விடுதலை பெற்ற பாரதத்தில் தமிழ் மக்களின் விழிப்புணர்வைத் தட்டி எழுப்புகிறார்.

இந்தக் கட்டுரையில் பாரதி மேலும் எழுதுகிறார்.

“இவ்வுலலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம், பொருள் இன்பம், வீடு என்பன.

“இவற்றுள் அறமாவது கடமை, அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும் பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. பிறர் என்பதனுள் வையகம் முழுவதும் அடங்கும். கடமையில் தவறலாகாது. தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.

“பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும் புகழும் நிறைந்திருத்தல். நல்ல மக்களைப் பெறுதல், இனப்பெருமை சேர்தல். இவையெல்லாம் செல்வம். இச்செல்வங்களைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.