பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. pugannumsu mogena, (ufusun eg’ğflmu) 62

“இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண், பாட்டு, கூத்து முதலிய ரஸ்வஸ்துக்களை அனுபவிப்பது. இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும் படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகுமுடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்சபூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இன்பம் எய்துக.

விடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். மேல் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேரிய பெரியோருக்கு, ஈசன் தானாகவே விட்டு நிலை, அருள் செய்வான். தமிழா! உனது புருஷார்த்தங்கள் கை கூடுக.” என்று பாரதியார் புருஷார்த்தங்களுக்கு விளக்கமும் பொருளும் கூறி அவை தமிழனுக்கு முழுமையாகக் கைகூட் வேண்டுமென்று வேண்டுகிறார். வாழ்த்துகிறார். அதுவே முழுமையான விடுதலையாகும்.

இவையெல்லாம் பாரத நாட்டின் பரிபூரண விடுதலைக்காக, பாரதி சிந்தித்த கருத்துக்களாகும். மேலும் மற்றொரு உண்மையை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியதிருக்கிறது. நமது நாட்டு மக்கள் வெறும் தற்காப்புக்காக மட்டும் நின்று தணிந்து போகவில்லை. பணிந்து போகவில்லை.

“நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்” என்பது கீதா வாக்கியம். இது கிருஷ்ண பரமாத்மா நமக்கு விடுத்துள்ள கட்டளை, தர்மக்கட்டளை, நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நாம் எப்போதும் முனைப்பாக இருக்க வேண்டும். பகவான் எப்போதும் நமக்குத் துணை நிற்பார். தாற்காலிகமாக நமக்குச் சில சமயங்களில்