பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LITUÉdsor e-swpo-noso evfuso leppte SoestuosGégossr-o. சீனிவாசன் 63

இதில் தோல்வியோ, பின்னடைவுகளோ ஏற்பட்டாலும் இறுதியில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். காரணம் தர்மம் நமது பக்கம் நிற்கிறது. நாம் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம்.

அவ்வப்போது நாம் நமது கடமைகளைச் செய்யத் தவறும் போது நமக்குக் கஷ்டங்கள் சூழ்ந்து நமது சமுதாயத்திற்கு சேதங்கள் ஏற்பட்டு விடுகிறது. இன்னும், "அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து, உலகம் பூணச்செந்நெறி செலுத்தித் தியோர் இறந்து உக நூறித்தக் கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு பிறந்தனன்' என்று இராம -பிரானுடைய அவதாரக் கடமைப் பற்றி அனுமன் இராவணினிடம் சபையில் எடுத்துக் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார்.

இங்கும் தருமத்தை நிலை நிறுத்துவது, தீயோரை ஒழிப்பது தக்கோளின் (நல்லவர்களின்) துயர் துடைப்பது ஆகிய கடமைகளைப்

பற்றி அனுமன் எடுத்துக் கூறுவது குறிப்பிடப்படுகிறது.

எனவே நமது சாத்திரங்கள் வெறும் தற்காப்புப் பொறுப்புகளைப் பற்றி மட்டும் எடுத்துக் கூறவில்லை. நல்லோர் துயர் துடைக்கும் தாக்குதல் தன்மையும் கொண்டிருக்கிறது. ஆயினும் நமது மக்கள் அறிஞர்களும் ஆற்றல் மிக்கவர்களும் தொழில் முனைவோரும் தொழில் திறம் கொண்டோரும் இளம் தலை முறையினரும் தங்கள் கடமைகளைச் செம்மையாக முழுமையாக நிறைவேற்றத் தவறும் போது நமது நாடு துவண்டிருக்கிறது.

மேற்கு ஆசிய, மத்திய ஆசியப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டின் மீது படையெடுத்த போதும் அவர்கள் நமது நாட்டைக் கொள்ளையடித்த போதும், சூரையாடிய போதும் நமது மன்னர்களும் மக்களும் சேர்ந்து கடுமையான எதிர்ப்பு கொடுத்துள்ளோம். ஆயினும்