பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமுழுமையான_விடுதஉைபரிபூான-குதந்திரம் В А

நம்மிடம் இருந்த வேறுசில பலவீனங்களால் நமக்குக் கஷ்டங்கள் நேர்ந்தன. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கிய 1757 பிளாசி யுத்த முடிவிலிருந்து 1857 முதலாவது சுதந்திரப் போராட்டம் வரை நூறாண்டு காலம் எத்தனை கஷ்டங்களுக்கிடையிலும் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து நமது மன்னர்களும் படைகளும் மக்களும் கடுமையாகப் போராடினார்கள். நவீன வலுவான ஆயுதங்களும், சூழ்ச்சிகளும், சில துரோகங்களும் ஆங்கிலேயர்களுக்குப் பக்கபலமாக இருந்தன. ஆயினும் அந்த ஆங்கிலேயர்களுக்கும் இந்தியா முழுவதையும் பிடிப்பதற்கு நூறாண்டு காலம் பிடித்தது.

அதன் பின்னர் 1857-ம் ஆண்டிற்குப் பின்னரும் நமது நாடு அமைதியாக அடங்கியிருக்கவில்லை. 90 ஆண்டுகளிலேயே நமது விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்று 1947-ல் நமது நாடு சுதந்திரம் அடைந்தது.

மகாகவி பாரதியார், ஜெகதீஷ் சந்திரவசு போன்ற எண்ணற்ற மகான்கள் நமது நாட்டில் தோன்றி நமது சுதந்திரப் போராட்டத்திற்கு வழி காட்டி, நமது முன்னாள் பெருமைகளை எடுத்துக் காட்டி, நமக்கு ஊக்க மூட்டியிருக்கிறார்கள். நமது கடமைகளை நினைவூட்டி -யிருக்கிறார்கள். அவர்களுடைய சீரிய தலைமையில் நமது மக்கள் விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்றார்கள்.

xx xx xx