பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LITUÉ"si e-swieso-uileo_erréfueo leppte £gpgmussQB$g$&cir- ci &cilcur&coI E 5

7.பாரத ஜாதி:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அந்த அன்னியர் ஆட்சியை எதிர்த்து இந்திய நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்னும் கிளர்ச்சி பலவேறு வடிவங்களில் எழுந்தது. 1885-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் ஸ்தாபனம் துவக்கப் பட்டது. அந்த ஸ்தாபனம் ஆண்டு தோறும் மகாநாடுகள் நடத்தி இந்திய மக்களின் பலவேறு உரிமைகளுக்கான கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் உருவாக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் லண்டன் பாராளுமன்றத்திற்கும் விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டிருந்தது.

அப்போது இந்திய அரசாங்க நிர்வாகத்திற்குள், இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, இலங்கை ஆகிய பகுதிகளும் இருந்தன. பின்னர், பர்மா, இலங்கை ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனி நிர்வாகங்கள் ஏற்பட்டுப் பின்னர் அவைகள் சுதந்திரம் அடைந்து இப்போது அவை சுதந்திரமான தனி நாடுகளாக உள்ளன.

பர்மாவும், இலங்கையும் பிரிக்கப் பட்ட பின்னர், இந்தியாவில் தனி நிர்வாகம் ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்தாபனம் இந்திய தேசியம் என்னும் கருத்தை முன் வைத்தது. அதனடிப்படையில் படிப்படியாக இந்திய தேசீய காங்கிரஸ் கட்சியின் தேசிய கோரிக்கைகள் கொள்கைகளின் அடிப்படையில் தேசிய சுதந்திரம் என்னும் கோரிக்கையும் முன் வைக்கப் பட்டது. 1947-ம் ஆண்டு இந்திய நாடு இருநாடுகளாகப் பிரிக்கப் பட்டு இந்தியா, பாகிஸ்தான் என்னும் பெயரில் சுதந்திரம் பெற்றன.

அப்போது பாகிஸ்தான் என்பது மேற்கில் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தானம், வடமேற்கு எல்லைப்புர மாகாணம் ஆகிய