பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. шпта, 258 65

பகுதிகளும் கிழக்கில் கிழக்கு வங்காளமும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக அமைந்தது.

பின்னர் 1972-ம் ஆண்டில் கிழக்கு வங்காளத்தில் பாகிஸ்தானிலிருந்து பிரிய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு, தனி நாடாகப் பிரிந்து பங்களாதேஷ் என்னும் நாடு ஏற்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்னும் மூன்று பகுதிகளும் சேர்ந்துதான் இந்திய தேசம் என்றும் அதனடிப்படையில் இந்திய தேசியம் என்னும் கருத்து வடிவமும் நிலை பெற்றிருந்தது. எனவே அன்று காங்கிரஸ் கட்சி சார்பில் எடுத்துக் கூறப்பட்ட இந்திய தேசியம் என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சுதந்திரக் கோரிக்கைக்காக எழுப்பப் பட்ட அரசாங்க நிர்வாக அடிப்படையிலான தேசியமாகும். இந்த தேசியம், ஐரோப்பிய கருத்து வடிவத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட தேசியம் பற்றிய கருத்துவடிவமாகும். ஆனால் 1946 - 1947-ம் ஆண்டுகளில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த போது முஸ்லிம்களைத் தனியாகப் பிரித்து முஸ்லிம்கள் தனி தேசம், முஸ்லிம் தேசியம் தனி தேசியம் என்னும் கருத்து தோற்றுவிக்கப் பட்டு, இந்தியா இரு நாடுகளாகப் பிரிக்கப் பட்டு முஸ்லிம் தேசியம் என்னும் பெயரின் வடிவமாக பாகிஸ்தான் உருவாயிற்று. பின்னர் அந்த முஸ்லிம் தேசியம் உடைந்து சோனார் பங்கள தங்க வங்கம்) தேசியம் மொழியின் அடிப்படையில் உருவாகி பங்களாதேஷ் அமைந்தது. அப்போது மொழி வழி தேசியம் என்னும் கருத்து வடிவமும் வலுப் பெற்றது.

தெற்கில் (தென் பாரதத்தில்) திராவிடம் என்னும் கற்பனை தேசிய வடிவம் தோற்றுவிக்கப் பட்டு இனவழி என்னும் பெயரில்