பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LITUÉBezir e-swȚEeo-uleb ewë"Leo Loppue சமுதாயக்கருத்துக்கள்-அ. சீனிவாசன்ட67

திராவிட தேசியம் என்னும் கருத்தையும் சிலர் ஊக்குவித்தனர். அதற்கு ஆந்திரம், கேரளம், கர்நாடகப் பகுதியில் எந்தவித ஆதரவும் இல்லாமல் திராவிட தேசியம் உதிர்ந்து போய்விட்டது. பின்னர் மொழியின் அடிப்படையில் தமிழ் தேசியம் என்றெல்லாம் கூட கருத்துக்கள் தோன்றின. அவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து போயின.

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் என்று பாரதி கூறினார். ஆனால் பாரதம் சேதப்பட்டு இரு பிரிவு, மூன்று பிரிவாக அரசுகள் அமைந்தன. சேதப்பட்ட இந்துஸ்தானத்தில் தனியாக இந்திய யூனியன் நிர்வாகம் அமைக்கப் பட்டது. ஒரு சமஷ்டி (கூட்டாட்சி) அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இந்திய யூனியனில் மத்திய ஆட்சி, மாநில ஆட்சிகள் அமைந்தன. பின்னர் மொழி வழியில் மாநிலங்கள் அமைக்கப் பட்டு இந்திய அரசு என்பது கூட்டாட்சி அமைப்பாக உருவாயிற்று. அப்போது மாநிலங்களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்றும், மாநிலங்கள் என்பது மொழியின் அடிப்படையிலான தேசியம் என்றும், இந்தியா என்பது பல தேசங்களைக் கொண்ட துணைக் கண்டம் என்றும் இந்திய தேசியம் என்பது ஒரு கூட்டு தேசிய அமைப்பு என்னும் கருத்துக்கள் தோன்றின.

ஆனால் இவையெல்லாம் பாரதத்தின் மரபு வழிக்கு அப்பாற் பட்ட கருத்துக்களாகும். அந்நிய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் ஆங்கிலேய கலாச்சார வழியில் உருவாக்கப் பட்ட ஐரோப்பிய சிந்தனை வடிவங்களாகும்.

எனவே இந்துஸ்தானம் பாரதம் என்பது நமது நீண்ட பாரம்பரியம் மிக்க மரபு வழியிலான தேசமும் தேசியமுமாகும். பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேதங்களாலும், நமது