பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. UTUS EXTÉ E 8

பண்பாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் நடை உடை பாவனைகளாலும், வாழ்க்கை வழி முறைகளாலும், நெறி முறைகளாலும் ஒழுக்க முறைகளாலும், நமது ஆன்மீக நெறிகளாலும் தெய்வ வழிபாடுகளாலும் தத்துவ ஞான சிந்தனைகளாலும் இணைக்கப் பட்ட கலாச்சார தேசியமே பாரத தேசியமாகும். இதை அன்னியர்களும் அன்னிய சிந்தனையாளர்களும் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். பாரத தேசியம் தனித் தன்மைக் கொண்டது. பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மகான்களால், ரிஷிகளால், முனிவர்களால், மகரிஷிகளால், கவிஞர்களால், பண்டிதர்களால், மகா பண்டிதர்களால் செங்கோல் மன்னர்களால், ராஜ ரிஷிகளால், வீர தீரர்களால், பூரண ஞானம் பெற்றிருந்த பெரும் மகான்களால், தத்துவ ஞானிகளால் தெய்வீக அருள் பெற்ற மாமனிதர்களால் உருவாக்கப் பட்ட தேசமும், தேசியமும் தேச பக்தியுமாகும். இது புண்ணிய பூமி என்று போற்றப் படும் ஒரு மகத்தான பூமியாகும்.

இந்தப் புண்ணிய பாரத பூமியைப் பற்றி எங்கள் நாடு என்னும் தலைப்பில் பூபாளராகத்தில் பாரதி ஒரு அருமையான பாடலைப் பாடியுள்ளார். அந்த அற்புதமான பாடல் வருமாறு:

“மன்னும் இமய மலையெங்கள் மலையே

மாநில மீது அதுபோல் பிரிதில்லையே

இன்னறு நீர்க்கங்கையாறெங்கள் ஆறே இங்கிதன் மாண் பிற்கெதிரெது வேறே

பன்னிரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார்மிசையேதொரு நூலிது போலே

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே

போற்றுவம் இஃதை யெமக்கிலையிடே