பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LITTÉdoor e-cowboy-deo sewfuso leppe *([PETulës pëgjësoir-et. *sofoners E9

மாரதர் விரர் மலிந்த நன்னாடு

மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு,

நாரத கானம் நலம் திகழ்நாடு

நல்லன யாவையும் நாடுறு நாடு

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம் பெரும் நாடே

பாடுவம் இஃதையெமிக்கிலை யிடே

என்று பாரதி பாடுகிறார்.

பாரதி தனது உரைநடையில் புனர்ஜன்மம்1 என்னும் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“ஹறிந்து ஸ்தானம் என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக் கூட்டத்திற்கு “பாரத ஜாதி” என்றும் பெயர் சொல்லுவதுண்டு. *

பாரதம் பரதன் நிலை நாட்டியது. இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமய மலை முதல் கன்னியாகுமரி முனை வரையிலுமுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன் மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்திய படியால் இந்த நாட்டிற்கு “பாரத தேசம்’ என்று பெயர் உண்டாயிற்று. கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்கள் எல்லாம் கங்கையாகவே மாறி விடும். பாரத தேசத்தில் வந்து குடியேறி தலை முறை தலைமுறையாக இங்கு வாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச் சேர்ந்தவராகின்றன.