பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLTLL LLLL LLL TSLL L TT L SLLLLLLLLTTA LLLSK LLLLLLL 71

8. ஆரிய ஸ்ம்பத்து:

= ஸம்பத்து என்பது ஸ்மஸ்கிருதச் சொல். இதன் பொருள் செல்வம். ஆனால் இங்கே செல்வம் என்பது திரவியத்தையும் பூஸ்திதியையும் ஆடுமாடுகளையும் மாத்திரமன்று. 1) அறிவுச் செல்வம், 2) ஒழுக்கச் செல்வம். 3) பொருட் செல்வம் ஆகிய மூன்றையும் குறிப்பிடும், “ஆரிய சம்பத்து” என்பது ஹிந்துக் -களுடைய அறிவு வளர்ச்சி பற்றியதாகும்.

“நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள், இவை அனைத்திற்கும் பொதுப் பெயர் “ஆர்ய ஸம்பத்து” காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹறிந்தி பாஷையிலே துளளலிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி இவையனைத்திற்கும் பொதுப் பெயர் “ஆர்ய ஸம்பத்து.”

தஞ்சாவூர்க் கோவில், திருமலை நாயக்கர் மஹால், தியாகய்யர் கீர்த்தனங்கள், எல்லோராவில் உள்ள குகைக்கோவில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் - இவையனைத்திற்கும் பொதுப் பெயர் - ஆர்ய சம்பத்து. எனவே ஆர்ய ஸம்பத்தாவது ஹிந்து ஸ்தானத்தின் நாகரிகம். இந்த ஸம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்கு உயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் இந்த ஜாதியை செல் அரித்து விடும்.

இந்த ஆரிய சம்பத்தை உலகம் உள்ள வரை ஸ்ம்ரகூடிணம் செய்து மேன்மேலும், ஒளியும், சிறப்பும் உண்டாகும் படி செய்யும் கடமை தேவர்களால் பாரத ஜாதிக்கு ஏற்படுத்தப் பட்ட கடமையாகும்”

என்று பாரதியார் கு றிப்பிடுகிறார்.